ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்ட பரபரப்பை தொட்டு பல திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை உட்பட நிறைய அணிகள் எளிதான கேட்ச்களை கூட கோட்டை விட்டு கையில் இருக்கும் நல்ல வெற்றியை எதிரணிகளிடம் பரிசளிப்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஐபிஎல் மட்டுமல்லாது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேட்ச் என்பது வெற்றிக்கான ஒரு முக்கிய படியாகும். அதுவும் டி20 கிரிக்கெட்டில் சரவெடியாய் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் எப்போதாவது கொடுக்கும் கேட்ச்களை பிடிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.
Photo Credits : Twitter |
அதிலும் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்சை கச்சிதமாக பிடித்துவிட்டால் அதோடு போட்டியில் வெற்றியும் பெற்று விடலாம். தவறிப்போய் கோட்டை விட்டால் காலத்திற்கும் நினைத்து வருந்தும் சொல்லி சொல்லி அடித்து வெற்றியை பறித்து விடுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 10 வீரர்களின் பட்டியல் இதோ:
1. சுரேஷ் ரெய்னா : 109 கேட்ச்கள்
2. கிரண் பொல்லார்ட் : 100 கேட்ச்கள்
3. ரோஹித் சர்மா : 95 கேட்ச்கள்
4. ஏபி டிவில்லியர்ஸ் : 90 கேட்ச்கள்
5. விராட் கோலி : 89 கேட்ச்கள்
6. ரவீந்திர ஜடேஜா : 87 கேட்ச்கள்
7. ஷிகர் தவான் : 86 கேட்ச்கள்
8. ட்வயன் ப்ராவோ : 80 கேட்ச்கள்
9. மனிஷ் பாண்டே : 78 கேட்ச்கள்
10. டேவிட் வாயினர் : 69 கேட்ச்கள்