இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடம் லக்னோ அகமதாபாத் ஆகிய அணிகளும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்றதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த 65 நாட்களாக பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து மே 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த மாபெரும் இறுதி போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
Photo Credits : BCCI/IPL |
பரிசு தொகை:
சரி இந்த தொடரில் கொடுக்கப்பட்ட பரிசுத்தொகைகளைப் பற்றி பார்ப்போம்:
1. சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் முதல் பரிசாக 20 கோடி பரிசளிக்கப்பட்டது.
2. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி இறுதிப்போட்டியில் வெற்றிக்காகப் போராடி 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் 12.5 கோடி ஆறுதல் பரிசு வென்றது.
3. அதேபோல் நாக்-அவுட் வரை வந்து குவாலிபயர் 2 போட்டியில் தோற்ற பெங்களூரு 7 கோடியையும் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ 6.5 கோடிகளை வென்றன.
4. 863 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற ஜோஸ் பட்லர் 10 லட்சம் பரிசை வென்றார்.
5. 45 சிக்சர்களை பறக்கவிட்டு அதிக ரசிகர்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் 10 லட்சம் பரிசை வென்றார்.
6. இந்த வருடத்தின் பெரும்பாலான போட்டிகளில் கேம் சேஞ்சராக செயல்பட்ட ஜோஸ் பட்லர் மீண்டும் 10 லட்சம் பரிசைப் பெற்றார்.
7. அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் அதற்காக மீண்டும் 10 லட்சம் பரிசை வென்றார்.
8. அத்துடன் ரன் மழை பொழிந்து ஆரஞ்சு தொப்பியை வென்ற ஜோஸ் பட்லர் மீண்டும் அதற்காக பரிசாக 10 லட்சம் வென்றார்.
9. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஜோஸ் பட்லர் மீண்டும் 10 லட்சம் பரிசை வென்றார்.
10. 27 விக்கெட்டுக்களுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்ற யுஸ்வென்ற சஹாலுக்கு10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.
11. இந்த வருடம் முழுவதும் அதிரடியாக அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற விருதை வென்ற 10 லட்சத்தை அள்ளினார்.
12. இந்த வருடம் முழுவதும் அசுர வேக பந்துகளால் எதிரணிகளை திணறடித்து அசத்திய 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்று 10 லட்சத்தை அள்ளினார்.
14. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரின்கு சிங் கேட்ச்சை பிடித்து லக்னோவை வெற்றி பெற வைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் அதற்காக 10 லட்சத்தைக் என்றார்.
15. அதேபோல் இந்த வருடத்தில் அதிவேகமான பந்தை வீசிய பலராக சாதனை படைத்த குஜராத்தின் லாக்கி பெர்குசன் அதற்காக 10 லட்சம் பரிசை அள்ளினார்.
16. அதைப்போல் போட்டியில் அற நெறியுடன் விளையாடுவதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளின் பேர் பிளே விருதை வென்றதால் 10 லட்சத்தை பகிர்ந்து கொண்டன.