ஐபிஎல் 2022 தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் கொண்ட முழு அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Photo Credits : BCCI/IPL |
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல மார்ச் 26 ஆம் தேதி என்று துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நான் முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Photo Credits : BCCI/IPL |
இரட்டை போட்டிகள் - பிளே ஆப் சுற்று:
2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் வரும் மே மாதம் 22ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. அதே போல் இந்த வருடம் 12 நாட்களில் ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் சனி ஞாயிறு எனப்படும் வார இறுதி நாட்களில் நடைபெற உள்ளது.
Photo Credits : BCCI/IPL |
இருப்பினும் இந்த பிளே ஆப் சுற்று போட்டிகள் எங்கே நடைபெற உள்ளது மற்றும் அதன் தேதிகள் இன்னும் வெளியாகவில்லை. வரும் மே 29ஆம் தேதியுடன் நிறைவுபெறும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் பெரும்பாலும் அகமதாபாத் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.