ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடர் : முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் - முழு அட்டவணை இதோ

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்த வருடம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா வரும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான பிளாக்பஸ்டர் போட்டியுடன் டி20 உலகக் கோப்பை 2022 தொடரை தொடங்க உள்ளது. அதேபோல் அக்டோபர் 30-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் நவம்பர் 2ஆம் தேதி வங்கதேசத்தையும் இந்தியா சந்திக்க உள்ளது.

Photo Credits : Getty Images


முழு அட்டவணை:

இந்த உலகக் கோப்பைக்கான குரூப் பிரிவுகள் மற்றும் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அதில் சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் உள்ளது. மேலும் முதல் சுற்றில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் இந்த பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகளுடன் மோத உள்ளது.

மேலும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் முதல் சுற்றின் வாயிலாக சூப்பர் 12க்கு தகுதி பெற உள்ளன. முதல் சுற்றில் ஏ மற்றும் பி பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.

குரூப் பிரிவுகள்:

அதை தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் 2 பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் உள்ளன.

இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் பிரிக்கப்பட்டுள்ள பிரிவுகள் இதோ:

குரூப் ஏ: ஸ்ரீலங்கா,நமிபியா,குவாலிஃபயர் 2, குவாலிஃபயர் 3

குரூப் பி : வெஸ்ட்இண்டிஸ்,ஸ்காட்லாந்து, குவாலிஃபயர் 1, குவாலிஃபயர் 4

சூப்பர் 12 குரூப் 1: ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , நியூஷீலாந்து, ஆப்கானிஸ்தான் , ஏ1, பி2

சூப்பர் 12 குரூப் 2: இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் , சவுத்ஆப்பிரிக்கா , பி1, ஏ2.

மைதானங்கள்:

மெல்போர்ன் கிரிக்கெட் கிரௌண்ட் , மெல்போர்ன்.

பெர்த் ஸ்டேடியம் , பெர்த்.

சிட்னி கிரிக்கெட் கிரௌண்ட், சிட்னி.

தி காபா , பிரிஸ்பேன்.

பேல்லேரிவ் ஓவல் , ஹோபர்ட்.

அடிலைட் ஓவல், அடிலைட்.

ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடருக்கான முழு அட்டவணை இதோ:

Photo Credits : ICC

ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடருக்கான இந்தியாவின் அட்டவணை இதோ:



Previous Post Next Post

Your Reaction