1994இல் கோடி கணக்கில் லஞ்சம் கொடுக்க முயன்ற பாக் வீரர் ! திடுக் தகவலை கூறும் ஷேன் வார்னே

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகள் சாய்த்து வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

Photo Credits : Getty Images


கிரிக்கெட் கண்ட ஒரு மகத்தான வீரராக இருக்கும் இவரின் கிரிக்கெட் வாழ்வில் கருப்பு புள்ளிகளை போல ஒரு சில சர்ச்சைகளும் இருந்தே வந்தன.

ஷேன் வார்னே:

குறிப்பாக ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக கடந்த 2003ஆம் ஆண்டு வாக்கில் ஒரு வருடம் தடை பெற்ற இவர் அந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே மோசமாக பந்து வீசுமாறு பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர் சலீம் மாலிக் லஞ்சம் கொடுக்க முயன்றதாக திடுக்கிடும் தகவலை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இது பற்றி அமேசான் பிரைம் பக்கத்தில் "ஷேன்" எனப்படும் ஆவணப்படத்தில் அவர் பேசுகையில்,

அந்த போட்டியின் போது, "நான் உன்னை பார்க்க வேண்டும்" என என்னிடம் அவர் கூறினார், அந்த சமயத்தில் நாங்கள் பாகிஸ்தானை தோற்கடிக்கும் நிலையில் இருந்தோம். அப்போது அவரின் அறைக்கு சென்று இருந்தேன், அவர் என்னை அமருமாறு பதில் அளித்த பின் "நாம் ஒரு நல்ல போட்டியில் மோதி வருகிறோம்" என கூறினார், அதற்கு "ஆம், நாளை நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்" என கூறினேன்.

அதற்கு அவர், "நல்லது, நாங்கள் தோற்கமாட்டோம்.. நாங்கள் பாகிஸ்தானில் தோற்றால் என்ன நடக்கும் என உனக்கு புரியாது, எங்கள் மற்றும் எங்களின் உறவினர்களின் வீடுகள் எரிந்து விடும் என கூறினார்".

என தெரிவித்த வார்னே தோல்வியிலிருந்து இருந்து தப்பிப்பதற்காக பந்தை வைட் போல வீச வேண்டும் அப்படி செய்தால் $276000 டாலர்கள் தனக்கும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிம்'க்கும் லஞ்சமாக கொடுப்பேன் என சலீம் மாலிக் கூறியதாக ஷேன் வார்னே திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

மறுத்த வார்னே:

அந்த சமயத்தில் என்ன சொல்வதென்றே எனக்கு தோன்றவில்லை, மேலும் "அது நடக்காது, நாங்கள் உங்களை நிச்சயமாக தோற்கடிப்போம்" என பதிலளித்தேன். இந்த காலத்தில் சூதாட்டம் பற்றி நீங்கள் பேசினால் அதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளதால் அதைத்தேடி யாரும் செல்ல மாட்டார்கள் ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு சூதாட்ட விழிப்புணர்வு பற்றி யாருமே பேசியதில்லை. அதுபோன்ற சமயத்தில் அவர் லஞ்சம் கொடுக்க கேட்டது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது ஏனென்றால் அந்த நேரத்தில் எனக்கு அதுபற்றி எதுவுமே தெரியாது

என அந்த மோசமான தருணம் பற்றி 30 வருடங்கள் கழித்து மனம் திறந்து உள்ள ஷேன் வார்னே சூதாட்டத்தில் ஈடுபட பாகிஸ்தான் வீரர் தம்மை தொடர்பு கொண்டதை உடனடியாக அப்போதைய கேப்டனாக இருந்த மார்க் டெய்லர் மற்றும் பயிற்சியாளர் பாப் டெய்லர் ஆகியோரிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் இதுபற்றி உடனடியாக போட்டி நடுவரிடம் புகார் செய்ததாகவும் கூறினார்.

அவர் கூறும் இந்த தருணமானது கடந்த 1994ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் 4வது நாள் முடிவில் நடைபெற்றதாகும்.

  • ஷான் வார்னே கூறும் சலீம் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 238 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த வேளையில் சூதாட்ட புகார் காரணமாக கடந்த 2000ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து வாழ்நாள் தடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction