ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ மற்றும் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன, அதில் முதல்கட்டமாக புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.
Photo Credits : BCCI |
இதன் காரணமாக இந்த புதிய 2 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் சிறிய அளவில் அல்லாத மெகா ஏலம் வரும் பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய 2 தேதிகளில் நடைபெற உள்ளது.
புதிய அணிகள்:
முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பிய வீரர்களை தக்க வைத்து அதற்கான பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ - அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் மெகா ஏலத்துக்கு முன்பாக அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
- அந்த விதிமுறையின்படி லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தாங்கள் விரும்பும் முதல் 3 வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளன.
அஹமதாபாத்:
இஷான் கிசான் - ரசித் கான்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சமீப காலமாக பாரம் இல்லாமல் தவிக்கும் அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்த போதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அகமதாபாத் நிர்வாகம் தனது அணியின் கேப்டனாக செயல்பட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது, இத்துடன் தங்கள் அணிக்கு விக்கெட் கீப்பராக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இளம் வீரர் இஷான் கிஷனை தேர்வு செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
- இவருடன் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரசித் கானையும் தங்கள் அணிக்கு விளையாட வைக்க அந்த அணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
லக்னோவில் ராகுல்:
அதேபோல் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை தங்கள் அணிக்காக விளையாட வைக்க லக்னோ நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது, இது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் விளையாட வைக்க முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
யுஸ்வென்ற சஹால் மற்றும் ராகுல் சஹர் போன்ற இந்தியாவைச் சேர்ந்த தரமான சுழல் பந்துவீச்சாளர்களையும் தங்கள் அணிக்காக விளையாட வைக்க இந்த 2 அணி நிர்வாகமும் போட்டி போட உள்ளதாக தெரிகிறது.
- மேலும் டெல்லி அணிக்காக முந்தைய சீசன்களில் கேப்டனாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யரை தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்து கேப்டனாக செயல்பட வைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்புவதாகவும் செய்திகள் கூறுகின்றன.