தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, இந்த தொடரில் செஞ்சூரியன் நகரில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா முதல் முறையாக அந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனையுடன் வெற்றியை ருசித்தது.
Photo Credits : BCCI |
இருப்பினும் ஜொகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது போட்டியில் விராட் கோலி இல்லாத இந்தியாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா 1 - 1* தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது, இதையடுத்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 11 ஆம் தேதி கேப் டவுன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்க உள்ளது.
வரலாறு படைக்குமா:
தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி வரும் இந்தியா இந்த 3வது டெஸ்ட் போட்டியை வெல்லும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும்.
- இருப்பினும் இப்போட்டி நடைபெறும் கேப்டவுன் மைதானத்தில் வரலாற்றில் இந்தியா களமிறங்கிய 5 போட்டிகளில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதே கிடையாது, 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்தியா 2 போட்டிகளை டிரா செய்தது.
மழை வழிவிடுமா:
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 2வது நாள் மழையால் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது, 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் மழையால் பாதிக்கப்பட்டது, இருப்பினும் மழையின் குறுக்கீட்டையும் தாண்டி இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுது.
அந்த வகையில் இந்த முக்கியமான 3வது போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்குமா என்பது பற்றி பார்ப்போம்:
வெதர் ரிப்போர்ட்:
இந்த 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் கேப் டவுன் நகரில் போட்டி துவங்கும் முதல் நாளில் காலை வேளையில் 30% க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது, இருப்பினும் முதல் நாளில் மதிய நேரத்திற்கு பின் எஞ்சிய அனைத்து நாட்களிலும் படிப்படியாக மழையின் வாய்ப்பு மிகவும் குறையும்.
முதல் நாள் தவிர ஏனைய நாட்களில் மழையின் குறுக்கீடு இல்லாமல் லேசான மேகமூட்டத்துடன் நீலவானம் காட்சி அளிக்கும், எனவே இந்த போட்டியில் டாஸ் வீசப்படுவது லேசாக தாமதித்தாலும் அதன்பிறகு மழையின் குறுக்கீடு இல்லாமல் முழு போட்டி நடைபெறும் என நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சற்று அதிக சாதகமாக இருந்து வருகிறது, எனவே ஆரம்ப கட்டத்தில் நிதானமாக விளையாடும் பேட்டர்கள் மலைபோல ரன்கள் குவிக்கலாம்.
- மறுபுறம் வேகபந்துவீச்சாளர்களுக்கும் இம்மைதானம் சம அளவில் வாய்ப்பளிக்கும் என நம்பலாம். மேலும் செஞ்சூரியன், ஜொஹனஸ்பர்க் போல் அல்லாமல் இந்த மைதானம் சுழல் பந்து வீச்சுக்கும் நிறைய கை கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் 419 ஆகும், இதிலிருந்தே மைதானம் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்துடன் வரலாற்றில் இம்மைதானத்தில் நடந்த 80% போட்டிகளில் சேசிங் செய்த அணிகளே வெற்றியை பெற்றுள்ளன என்பதால் இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது