கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் ஒயிட்-பால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கடந்த காலண்டர் ஆண்டில் அவர்களின் அற்புதமான செயல்பாட்டிற்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.
இந்த அணிக்கு கேப்டனாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பேற்றுள்ளார், அதில் அவரது நாட்டவர் மற்றும் முதல்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற கைல் ஜேமிசனும் உள்ளார்.
கனவு அணி:
3 இந்தியர்கள் மற்றும் 2 நியூசிலாந்து வீரர்களைத் தவிர இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஸ்ஷேன், இலங்கையின் திமுத் கருணாரத்னே மற்றும் பாகிஸ்தானின் ஃபவாத் ஆலம், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி ஆகிய மூவரும் இந்த அணியில் உள்ளனர்.
3 இந்தியர்கள்:
ரோஹித் சர்மா : 2021 இந்தியாவுக்கான டெஸ்டில் ரோஹித் ஒரு முழுநேர தொடக்க வீரராக களமிறங்கிய ஆண்டாகும்.
- அவர் கடந்த ஆண்டில் 47.68 சராசரியில் 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களுடன் 906 ரன்கள் எடுத்தார்.
2 சதங்களும் இங்கிலாந்துக்கு எதிரான மாறுபட்ட சூழ்நிலைகளில் இருந்தன. ஒன்று சென்னையில் மற்றொன்று ஓவல் மைதானத்தில் மேகமூட்டமான சூழ்நிலையில் அடித்ததாகும்.
ரிஷப் பண்ட் : ரிஷப் பண்ட் 2021 இல் 3 வகையான கிரிக்கெட்டின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர்-பேட்டராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அவரது தொடர்ச்சியான வளர்ச்சி குறிப்பாக டெஸ்ட் அரங்கில் முன்னணியில் வந்தது.
- அவர் கடந்த 2021இல் 12 போட்டிகளில் 39.36 சராசரியுடன் 748 ரன்களை எடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் ஒரு மறக்க முடியாத சதம் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்கள் மற்றும் அதே எதிரணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 89* ரன்கள் எடுத்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்: அஸ்வின் 2021 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- அஷ்வின் 9 போட்டிகளில் 16.64 சராசரியுடன் 54 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அத்துடன் அவர் 25.35 சராசரியில் 355 ரன்களை எடுத்தார், இதில் இங்கிலாந்திற்கு எதிராக சென்னையில் உள்ள அவரது சொந்த மைதானத்தில் ஒரு முக்கியமான சதமும் அடங்கும்.
ஐசிசி அறிவித்துள்ள 2021 கனவு டெஸ்ட் அணி இதோ:
திமுத் கருணாரத்னே, ரோஹித் சர்மா, மார்னஸ் லபுஸ்ஷேன் , ஜோ ரூட் , கேன் வில்லியம்சன் (கேப்டன்), பாவட் ஆலம், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் ,கைல் ஜமிஷன், ஹசன்அலி, ஷாஹீன் அப்ரிடி