இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Photo Credits : Getty Images |
1998இல் இந்தியாவுக்காக விளையாட துவங்கிய இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகள் எடுத்ததுடன் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலக கோப்பை போன்ற பல இந்தியாவின் சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
குற்றசாட்டு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 வயதிலேயே 400 விக்கெட்டுகளை எடுத்த பின்பும் கூட இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அப்படி கிடைத்திருந்தால் 500 விக்கெட்டுக்கு மேல் எடுத்திருக்க முடியும் எனவும் ஓய்வு பெற்ற சில வாரங்களுக்கு பின் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி அனி செய்தியில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
என்னுடைய நண்பர்களான விரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோருடன் இன்னுமொரு உலகக்கோப்பை விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் 400 விக்கெட்டுகள் எடுத்திருந்த போது எனக்கு வயது 31, 2011 உலக கோப்பையில் விளையாடிய போதும் எனக்கு வயது 31, அந்த சமயத்தில் நான் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தேன், சொல்லப்போனால் அணியில் இருந்தவர்களை விட எனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தேன்.
இருப்பினும் அந்த உலகக் கோப்பைக்கு பின்னர் அனைத்தும் எங்கள் வழியில் செல்லவில்லை, திடீரென்று என்ன நடந்தது என்று புரியவில்லை யார் அதன் பின்னால் இருந்தார்கள் என தெரியவில்லை, அதைப் பற்றி பேசி பயனும் இல்லை ஆனால் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் கவுதம் கம்பீருடன் நானும் இணைந்து இன்னுமொரு உலக கோப்பையில் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
என தெரிவித்தார். 2011 உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்பஜன் சிங் கூறும் விரேந்திர சேவாக் அந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 175 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தவர், யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வென்றவர், கௌதம் கம்பீர் இறுதி போட்டியில் 97 ரன்கள் விளாசி இந்தியா உலக கோப்பையை வெல்ல வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட விளையாடவில்லை:
2015 உலக கோப்பையில் விளையாட நாங்கள் உடலளவில் தகுதியானவர்களாக இருந்தோம் ஆனால் அது நடக்கவில்லை, அது எங்கள் கையில் இல்லை என்றாலும் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய செய்துள்ளோம். வாய்ப்பு கிடைக்காதது பற்றி யார் பதில் அளிப்பார்கள் என தெரியவில்லை ஆனால் இதுபற்றி பிசிசிஐயிடம் தான் கேட்க வேண்டும், 2011 உலக கோப்பையை வென்ற பின் ஏன் இவர்கள் ஒன்றாக விளையாட வில்லை என பிசிசிஐ நினைக்கவில்லை அந்த சமயத்தில் நாங்கள் 30 வயதின் இறுதிகட்டத்தில் இருக்கவில்லை, 30 வயதில் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தோம். அப்போது எனக்கு 31, சேவாக் வயது 31 - 32, யுவராஜ் 29 - 30 ஆனால் அடுத்த உலக கோப்பையில் எங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காதது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
என கூறிய இது பற்றி மேலும் கூறிய ஹர்பஜன் சிங் 2011 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய போதிலும் அதன் பின் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பையில் விளையாட தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என பிசிசிஐ மற்றும் அப்போதைய கேப்டன் தோனி மீது மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.