டீன் எல்கரை பாத்து திருந்துங்க ! புஜாரா - ரஹானேவை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 - 0 என தொடரில் முன்னிலை வகித்தது.

Photo Credits : Getty Images


இதை அடுத்து நேற்று ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை விட மிகச் சிறப்பாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 - 1 என தொடரை சமன் செய்து இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

புஜாரா - ரஹானே:

இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைவதற்கு இந்தியாவின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள், ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ராகுல் 50 ரன்கள் மயங்க் அகர்வால் 26 ரன்கள் என ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் அடுத்து வந்த இவர்களில் புஜாரா 3 ரன்களில் நடையை கட்ட ரகானே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார், கடந்த 2 வருடங்களாகவே ரன்கள் குவிக்க திணறி வரும் இவர்கள் ராகுல் கொடுத்த நல்ல தொடக்கத்தை தவற விட்டதால் இந்தியா முதல் இன்னிங்சில் பெரும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

காலம் கடந்து:

இதனால் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் 2வது இன்னிங்சில் இந்த ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் அது இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில் புஜாரா மற்றும் ரஹானேவின் நிலைப்பாடு பற்றி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார், இதுபற்றி ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தில் அவர்,

புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் இன்னிங்ஸ் பற்றி நீங்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது, முக்கியமான நேரத்தில் இருவரும் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணியில் அவர்களின் இடத்தை காப்பாற்றியுள்ளது, ஆனால் இவர்களிடம் உள்ள அனுபவத்திற்கு இன்னும் பெரிய ஸ்கோர்கள் அடித்திருக்க வேண்டாமா? டீன் எல்கரை பாருங்கள். அவரை போல 80 அல்லது 90 அல்லது 100 ரன்களை அடித்திருந்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு இந்தியா இன்னும் சற்று கூடுதலான இலக்கை நிர்ணயம் செய்திருக்கும்

என கூறியுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டீன் எல்கர் பேட்டிங் செய்யும்போது மழையால் பிட்ச் பேட்டிங் சாதகமாக மாறியது உண்மைதான் என்றாலும் அவரை விட அனுபவம் கொண்ட புஜாரா மற்றும் ரகானே அவரைவிட அதிக ரன்கள் அடிக்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறுவதுபோல தற்போது அரை சதங்கள் அடித்த காரணத்தால் புஜாரா - ரகானே ஆகியோர் தங்களின் இடத்தை இந்திய அணியில் காப்பாற்றி கொண்டுள்ளார்கள், இதை வைத்து குறைந்தபட்சம் இன்னும் 6 மாதங்களுக்கு அவர்கள் அணியில் நீடிப்பார்கள் என்றாலும் இது போன்ற முக்கியமான நேரத்தில் பெரிய ரன்கள் அடிக்க வில்லை என்றால் அது இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பலன் அளிக்க போவதில்லை என்பதை அவர்கள் இனியாவது உணர வேண்டும் என்பதை இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction