IPL Retention 2022 : தவறான முடிவுகளை எடுத்த பஞ்சாப், ஹைதராபாத்

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களையும் அவர்களுக்கு அந்தந்த அணிகள் செலவிட்ட தொகைகள் பற்றிய முழு விவரங்கள் நேற்று முன்தினம் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.

Photo Credits : BCCI/IPL

இதில் சென்னை மும்பை கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்தன. ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தக்க வைத்தன, பஞ்சாப் வெறும் 2 வீரர்களை மட்டும் தக்க வைத்தது.

ஹைதெராபாத் & பஞ்சாப் :

இந்த செயல்பாட்டில் சென்னை மும்பை உள்ளிட்ட அணிகள் முக்கியமான வீரர்களை தக்க வைத்து சிறப்பான முடிவுகளை எடுத்தது. இருப்பினும் ஒரு சில அணிகள் பல்வேறு காரணங்களுக்காக பல முக்கிய வீரர்களை விடுவித்து தவறான முடிவுகளை எடுத்துள்ளது, இது ஐபிஎல் நடைபெறும் போது அந்த அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அது பற்றி பார்ப்போம்:

1. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

உட்கட்சி பூசல் என்பதுபோல் ஐபிஎல் 2021 தொடரில் ஹைதராபாத் அணி நிர்வாகம் அந்த அணியின் முக்கிய வீரர் டேவிட் வார்னரை முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது, ஹைதெராபாத் அணிக்காக மலை போல ரன்கள் குவித்து 3 முறை ஆரஞ்சு தொப்பி வாங்கியதுடன் 2016 ஆம் ஆண்டு கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ஆனால் அதையெல்லாம் மறந்து அந்த அணி நிர்வாகம் அவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியிலும் நீக்கி அவமானப்படுத்தியது, இதனால் மனமுடைந்த அவர் இனி ஹைதராபாத் அணிக்காக விளையாட போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

அத்துடன் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் ரசித் கானையும் தக்க வைக்க வில்லை, அதேபோல் தமிழகத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வீரர் நடராஜன் மற்றும் அனுபவ புவனேஸ்வர் குமாரையும் நழுவ விட்டுள்ள அந்த அணி அப்துல் சமத் போன்ற இளம் வீரர்களை நம்பி களமிறங்க உள்ளது.

  • முக்கிய வீரர்கள் பலரும் இல்லாத நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் ஐதராபாத் அணியின் செயல்பாடுகளை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

2. பஞ்சாப் கிங்ஸ்:

இந்த சீசனில் மிகவும் குறைந்தபட்சமாக மயங் அகர்வால் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டும் தக்க வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, இதனால் 72 கோடிகளுடன் மெகா ஏலத்தில் அதிக தொகை கையிருப்புடன் களமிறங்கும் அணியாக பஞ்சாப் விளங்குகிறது.

  • இருப்பினும் அந்த அணி நிர்வாகம் பல முக்கிய வீரர்களை தக்கவைக்காமல் கோட்டை விட்ட தவறை செய்துள்ளது என்று கூற வேண்டும்.

முதலில் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க முடியவில்லை, இதற்கு காரணம் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்க விரும்பினார் என பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் முகமது சமியை ஏன் தக்க வைக்க வில்லை என தெரியவில்லை, அதைவிட சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் அலி கோப்பை 20 ஓவர் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்த தமிழகத்தின் இளம் வீரர் சாருக்கானையும் தக்க வைக்க வில்லை.

கடந்த சில வருடங்களாகவே பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷாருக்கான் போலவே சப்ராஸ் அகமதையும் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க வில்லை.

இந்த வீரர்கள் அனைவரையும் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியால் வாங்கிவிட முடியுமா என்பதைப் பற்றி அந்த நிர்வாகம் யோசிக்க வில்லை என்றே கூற வேண்டும், இது போல பஞ்சாப் அணி வரலாற்றில் பல முறை ஏலத்தில் சொதப்பியதால் தான் 2014 க்கு பின் இன்னும் ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை என அந்த அணி நிர்வாகம் இன்னும் உணரவில்லை.

Previous Post Next Post

Your Reaction