IPL Mega Auction 2022 : ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய 5 நட்சத்திர பவுலர்கள்

ஐபிஎல் 2022 தொடரில் புதியதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக இம்முறை சிறிய அளவில் இல்லாமல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது, இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக இந்த தொடரில் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியாகியது.

Photo Credits : BCCI/IPL


மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அதிகபட்சமாக வரும் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

நட்சத்திர பவுலர்கள்:

டி20 கிரிக்கெட் வந்த பிறகு ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களின் நிலைமை படாத பாடாக உள்ளது, இருந்தாலும் தங்களது திறமையை பயன்படுத்தி டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு பல அணிகள் பல ரூபாய் கோடிகளை கொட்டிக் கொடுக்கின்றன.

  • குறிப்பாக ஐபிஎல் 2021 தொடரின் மிக வேகமான பந்தை வீசிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை கண்ணை மூடிக்கொண்டு 4 கோடி ரூபாய்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

அந்த வகையில் மெகா ஏலத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய 5 முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் பற்றி பார்ப்போம்:

1. பட் கமின்ஸ் :

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடி ரூபாய்களுக்கு வாங்கியது, இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

15.50 என்ற மிகப்பெரிய தொகைக்கு தன்னை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணிக்கு அவரும் கடந்த 2 சீசன்களாக அபாரமாக பந்தி வீசியதுடன் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அதிரடியாக பேட்டிங் செய்த ரன்களையும் குவித்தார் ஆனாலும் அவரை இந்த முறை கொல்கத்தா நிர்வாகம் தக்கவைக்காமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேளையில் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி துவங்க இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக பட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது அவரின் மவுசை மேலும் எகிற செய்துள்ளது, ஏற்கனவே 15.50 கோடி ரூபாய்களுக்கு விலைபோன இவரை இந்த முறையும் தங்கள் அணிக்கு வாங்க எந்த ஒரு அணியும் யோசிக்காமல் போட்டி போடும் என எதிர்பார்க்கலாம்.

இதன் காரணமாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹர்ஷல் படேல் பெற்றார் ஆனாலும் இவரை பெங்களூரு அணி நிர்வாகம் தக்கவைக்காமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2. ஹர்ஷல் படேல்:

ஐபிஎல் 2021 சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்சல் பட்டேல் அபாரமாக பந்துவீசி 32 விக்கெட்டுகளை எடுத்து ஊதா நிற தொப்பியை வென்று சாதனை படைத்தார். ஹாட்ரிக் விக்கெட்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் உட்பட பல சாதனைகளைப் படைத்த இவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவிற்காக விளையாடாத பவுலர் என்ற புதிய வரலாற்றையும் படைத்தார்.

விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோருக்குப் பின் 4-வது வீரராக கூட இவரை தக்கவைக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது, எனவே மெகா ஏலத்தில் ஹர்சல் படேலை பல கோடி ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என உறுதியாக நம்பலாம்.

3. தீபக் சஹர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் தீபக் சஹர் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதில் வல்லவர், இவரை திறமையான பவுலராக உருவாக்கியதில் சென்னை கேப்டன் எம்எஸ் தோனியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இருப்பினும் மெகா ஏலத்திற்கு முன் தோனி உட்பட அதிகபட்சமாக 4 வீரர்களை சென்னை நிர்வாகம் தக்க வைத்ததன் காரணமாக தீபக் சகாரை தக்க வைக்க முடியவில்லை, எனவே இவரை மெகா ஏலத்தில் தக்கவைக்க கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பும் என எதிர்பார்க்கலாம் ஆனால் மற்ற அணிகள் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவ்வளவு எளிதாக விலைக்கு வாங்க விட்டுவிடாது ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் மட்டுமல்லாது இந்தியாவுக்காகவும் இவர் அபாரமாக பந்துவீசி உள்ளார்.

  • குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் போன்ற வரலாற்றுச் சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

அத்துடன் லோயர் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்து முக்கிய ரன்களை குவிக்க கூடியவராகவும் இவர் இருக்கிறார், அதற்கு எடுத்துக்காட்டாக இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 63* ரன்கள் குவித்து இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெறச் செய்தார், எனவே இவரை சென்னை உட்பட அனைத்து அணிகளும் ஏலத்தில் வாங்க பல கோடி ரூபாய்களுடன் போட்டி போடும் என நம்பலாம்.

4.நடராஜன் தங்கராசு:

தமிழகத்தின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதன் காரணமாக இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்புப் பெற்ற அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதி கட்ட ஓவர்களில் யார்க்கர் பந்துகளை அசராமல் வீசும் வல்லமை பெற்ற இவரை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தக்கவைக்காமல் இளம் உம்ரான் மாலிக், அப்துல் சமட் போன்ற வீரர்களை தக்க வைத்துள்ளது, இருப்பினும் திறமை வாய்ந்த நடராஜனை அனைத்து அணிகளும் வாங்க கடும் போட்டியிடுவதை பார்க்கலாம்.

5. ககிஸோ ரபாடா:

டெல்லி அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் காகிஸோ ரபாடா பவர் பிளே மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் அதிரடியாக பந்து வீசுவதில் வல்லவர் ஆனால் இவரை தக்க வைக்காமல் மற்றொரு தென் ஆப்பிரிக்க பவுலர் அன்றிச் நோர்ட்ஜெவை தக்கவைத்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது நல்ல பார்மில் இருக்கும் ரபாடாவையும் எவ்வளவு செலவு செய்து வேண்டுமானாலும் அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கு விளையாட வைக்க போட்டி போடும் என எதிர்பார்க்கலாம்.
Previous Post Next Post

Your Reaction