IND vs NZ 2nd Test : விராட் கோலிக்கு ராசியான வான்கடே, அடம் பிடிக்கும் 71வது சதம் அடிப்பாரா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது.

Photo Credits : BCCI


இருப்பினும் மும்பை மாநகரில் தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாகவே வான்கடே மைதானத்தை சுற்றிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது, இதனால் பிட்ச் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மழையால் ஏற்பட்ட அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.


திரும்பிய விராட் கோலி:

இந்த போட்டியில் முதல் போட்டியில் இடம் பெறாத இந்திய கேப்டன் விராட் கோலி திரும்பியுள்ளது இந்தியாவிற்கு பலத்தை சேர்க்கிறது என்றாலும் ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகிய 3 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர், இவர்களுக்கு பதில் யார் களமிறங்க உள்ளனர் என்ற விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

  • இந்திய அணிக்கு விராட் கோலி திரும்பியுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் இருந்து அந்த அணியின் முக்கிய வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராசியான வான்கடே:

இந்த நிலையில் இப்போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம் என்றே கூற வேண்டும்.

இந்த மைதானத்தில் கடைசியாக விராட் கோலி கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து 235 ரன்கள் குவித்து அசத்தினார்.

  • இத்துடன் வரலாற்றில் இங்கு அவர் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 3 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 463 ரன்களை 72.16 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார்.

இதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் களமிறங்கி 1 அரை சதம் மற்றும் 1 சதம் உட்பட 265 ரன்களை எடுத்துள்ளார், டி20 கிரிக்கெட்டிலும் 3 போட்டிகளில் பங்கேற்று 2 அரைசதம் உட்பட 197 ரன்களை விளாசியுள்ளார்.

அடம் பிடிக்கும் 71வது சதம்:

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய நிலைமையில் ஒரு ரன் மெஷினாக விளங்கிவரும் விராட் கோலி இதுவரை மொத்தம் 70 சதங்களை அடித்துள்ளார், இருப்பினும் கடந்த 2 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவித்து வருகிறார்.

  • கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு கொல்கத்தாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 70தாவது சதம் அடித்திருந்தார், அதன்பின் 71வது சர்வதேச சதம் அவரை தொடாமல் அடம் பிடித்து வருகிறது.

உலக சாதனை படைப்பாரா:

தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 70 சதங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் 71ஆவது சதத்தை விராட் கோலி அடிக்கும் பட்சத்தில் புதிய உலக சாதனை படைப்பார்.

எனவே தமக்கு மிகவும் ராசியான வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அடம்பிடிக்கும் 71 வது சதத்தை விளாசி உலக சாதனை படைப்பாரா என்பதே அவரின் ராசிகளின் விருப்பமாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction