இந்திய கிரிக்கெட் அணியினர் இன்னும் ஒரு வாரத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர், இதில் முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதியன்று சென்சூரியன் நகரில் துவங்குகிறது.
Photo Credits : Getty Images |
பரிதாப ரகானே:
இந்த சுற்றுப் பயணத்தில் நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனாக விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், அத்துடன் முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரகானே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவிக்க முடியாமல் பார்ம் இல்லாமல் தள்ளாடி வருகிறார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை, இதன் காரணமாகவே அவரின் துணை கேப்டன் பொறுப்பு பறிபோய் உள்ளது எனக் கூறலாம்.
இடம் கிடைக்குமா:
இருப்பினும் அவரின் அனுபவத்திற்கு மதிப்பு கொடுத்துள்ள இந்திய அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மீண்டும் தேர்வு செய்துள்ளது ஆனாலும் அந்த தொடரில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாக கருதப்படுகிறது.
இந்த வேளையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார். இது பற்றி அவர்,
அணியில் எப்போதும் ஜூனியர் மற்றும் சீனியர்கள் இருக்க வேண்டும், 2013இல் கூட ரகானே இதை செய்துள்ளார். அத்துடன் பொதுவாகவே சொந்த மண்ணில் தடுமாறினாலும் ரகானே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட கூடியவராக இருந்துள்ளார், இதை தேர்வு குழுவினர் கருத்தில் கொண்டு சொந்த ஊர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுந்தார் போல் வெவ்வேறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ரகானே எப்போதுமே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் கூடியவராக உள்ளார் ஆனால் அவரின் பார்ம் காரணமாக தேர்வு குழுவினர் பதட்டத்தில் உள்ளதால் அவருக்கு ஆதரவு கொடுக்கலாமா அல்லது நீக்கலாமா என முடிவு எடுக்க வேண்டும்.
என இந்தியா டுடே பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இவர் கூறுவது போல வரலாற்றில் ரகானே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட கூடியவராக இருந்து வருகிறார் என்றாலும் கடந்த ஒரு வருடமாக வெளிநாடுகளில் கூட அவர் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
- குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரகானே ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.