கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய 48 மணி நேர கெடு விதித்த பிசிசிஐ, மீறிய கோலி - நீக்கிய பிசிசிஐ ! திடுக் தகவல்

இந்திய ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நேற்று அதிரடியாக நீக்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது, இதன் பின்னணியில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது தற்போது வெளிவந்துள்ளன.

Photo Credits : Getty Images


கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் தலைமையில் இந்தியா மார்தட்டும் அளவுக்கு வெற்றிகளை பெறவில்லை என்றே கூறலாம்.

உலககோப்பை:

குறிப்பாக 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைகளின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் நாக்-அவுட் சுற்றில் படு மோசமான தோல்விகளை விராட் கோலி தலைமையிலான இந்தியா சந்தித்தது, அத்துடன் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விராட் கோலி ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

மறுபுறம் அதே ஐபிஎல் தொடரில் அசால்டாக 5 கோப்பைகளை வென்று வரலாறு படைத்த ரோஹித் சர்மா டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே இந்திய கிரிக்கெட்டில் புகைந்து வந்தது, இந்த தொடர் விமர்சனங்களால் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடருடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

  • அப்போது "டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாட உள்ளதாகவும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு தொடர்ந்து கேப்டன்ஷிப் செய்ய உள்ளதாகவும்" தெரிவித்தார்.

ஒருநாள் கேப்டன் பதவி:

அதை தொடர்ந்து நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா தோற்றத்தன் காரணமாக விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியும் கேள்விக்குறியானது, ஏனெனில் ஏற்கனவே 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைகளில் கேப்டனாக விராட் கோலிக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்து விட்டது ஆனால் அதில் அவர் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதனால் 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ள அடுத்த 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கு புதிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் புதிய அணியை உருவாக்க பிசிசிஐ விரும்பியது, அதன் ஒரு பகுதியாகத்தான் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

48 மணிநேர கெடு:

2021 டி20 உலக கோப்பைக்கு பின்னர் புதிய கேப்டனாக ரோகித் சர்மா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 உலககோப்பைக்கு முன்னர் புதிய இந்திய அணியை உருவாக்க விரைவில் நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்தில் நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்பே முடிவெடுத்து விட்டது.

இது பற்றி தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோலியிடம் தெரிவித்த பிசிசிஐ அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என அறிவிக்க கெடு விதித்ததாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்தியாவிற்காக ஒருநாள் கேப்டன்ஷிப் செய்து வந்த விராட் கோலியை கௌரவப்படுத்தும் வகையிலேயே அவரின் வாயிலேயே இந்த அறிவிப்பை வெளியிட பிசிசிஐ நேரம் கொடுத்தது.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத விராட் கோலி தொடர்ந்து மௌனம் சாதிக்க 49வது மணி நேரத்தில் அதாவது நேற்று இரவு 8 மணி அளவில் விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதாகவும் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் அறிவிப்பு கூட இல்லாமல் அவசர அவசரமாக பிசிசிஐ சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அவரும் வேறு வழியின்றி இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction