இன்று முதல் Vijay Hazare Trophy 2021 : மீண்டும் கோப்பை வெல்லுமா தமிழ்நாடு - முழு விவரம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021/22 தொடர் டிசம்பர் 8 முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்க உள்ளது.


கடந்த 2002 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக தமிழ்நாடு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று இத்தொடரின் வெற்றிகரமான அணியாக ஏற்கனவே சாதனை படைத்துள்ளது.

மும்பை மற்றும் கர்நாடகா ஆகிய அணிகளும் தலா 4 முறை இந்த தொடரின் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளன.

20வது சீசன்:

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பையின் 20வது சீசன் டிசம்பர் 8 முதல் 29 வரை இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது, இதில் நடப்பு சாம்பியன் மும்பை தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 பங்கேற்க உள்ளன.

இந்த 38 அணிகளும் எலைட் குரூப் ஏ, பி, சி, டி, ஈ  மற்றும் பிளேட் என மொத்தம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, அதில் 5 எலைட் குரூப் பிரிவில் தலா 6 அணிகளும் பிளேட் குரூப் பிரிவில் 8 அணிகளும் இடம் பிடித்துள்ளன.

சுற்று விவரம்:

ரவுண்ட் ராபின் மற்றும் பிளே ஆப் சுற்று முறைப்படி நடைபெறும் இந்த தொடரில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 169 போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் லீக் சுற்று முடிவில் எலைட் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய 4 பிரிவுகளில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் 4 அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் 2வது இடம் பிடிக்கும் 3 அணிகள் மட்டும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும், அதே சமயம் எலைட் குரூப் ஈ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் பிளேட் குரூப் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணியும் எஞ்சிய 2 காலிறுதிக்கு முந்தைய சுற்று இடத்துக்கு தகுதி பெறும்.

பின்னர் நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதி சுற்றில் முதல் 3 காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற அணியுடன் மோத வேண்டும்

காலிறுதி சுற்றில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும், மறுபுறம் காலிறுதிச் சுற்றில் 3வது போட்டியில் அணியும் பிளேட் குரூப்பில் வெற்றி பெறும் 2வது அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் மோதும், அதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்

  • அதைத் தொடர்ந்து நடைபெறும் அரை இறுதிபோட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை நடத்தும்.

தமிழ்நாடு:

இந்த தொடரில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக டிசம்பர் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் மோதுகிறது.

இந்த தொடரில் களமிறங்க உள்ள தமிழ்நாடு அணி இதோ:

விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக் கான், சாய் கிஷோர், முருகன் அஷ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜு, எம் முகமத், ஜே கௌசிக், சரவணன் குமார், எல் சூர்யப்பிரகாஷ், பி இந்திரஜித், சஞ்சய் யாதவ், கௌஷிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.

Previous Post Next Post

Your Reaction