புதிய ஒருநாள் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் ரெகார்ட் ! காத்திருக்கும் 3 சவால்கள்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று முன்தினம் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் துணை கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதை அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் அவர் தலைமை ஏற்க உள்ளார்.

Photo Credits : BCCI


2017 முதல் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த போதிலும் விராட் கோலி தலைமையில் 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வெள்ளை பந்து உலக கோப்பைகளை இந்தியா வெல்ல தவறியது, அதனால் அவரின் கேப்டன்ஷிப் மீதான நம்பிக்கையை இழந்த பிசிசிஐ மறுபுறம் ஐபிஎல் தொடரில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 5 கோப்பைகளை ரோகித் சர்மாவிடம் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் முழு கேப்டன் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளது.

ரோஹித் சர்மா:

புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா வரலாற்றில் இதற்கு முன்பு இந்தியாவிற்காக 10 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார்.

  • அதில் 8 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் இந்தியா பெற்றது, வெற்றி விகிதம் 80% ஆகும்.

அதேபோல் கேப்டனாக பொறுப்பு வகித்த இந்த 10 போட்டிகளில் பேட்டிங்கிலும் ரோகித் சர்மா மிரட்டியுள்ளார், இந்த 10 போட்டிகளிலும் சேர்த்து அவர் மொத்தம் 543 ரன்களை 77.57 என்ற மிகச் சிறப்பான சராசரியில் விளாசியுள்ளார்.

  • இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து 208* ரன்கள் விளாசி சாதனையும் படைத்துள்ளார்.

சவால்கள்:

வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயாராகும் வண்ணமாகவே ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் உலக கோப்பைக்கு முன்னர் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் ஒரு சில சவால்கள் இதோ:

1. விராட் கோலிக்கு ஆதரவு:

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தலைமையில் இந்தியா 70% வெற்றிகளைப் பெற்றுள்ளது, அதேபோல் பேட்டராக அவர் 70+ க்கும் மேற்பட்ட சராசரியில் ரன்களை விளாசியுள்ளார். இருப்பினும் உலக கோப்பை வெல்ல முடியாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவருக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா முழு ஆதரவை அளிக்க வேண்டும்.

டெஸ்ட், டி20 கிரிக்கெட்டை விட இதுநாள் வரை விளையாடியதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் தான் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி உள்ளார் ஆனாலும் சமீபகாலமாக பார்ம் இல்லாத அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு சதம் அடித்திருந்தார்.

  • ஏற்கனவே பணிச் சுமையை காரணம் காட்டி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது ஒருநாள் கேப்டன் பொறுப்பும் இல்லாத காரணத்தால் இனி சுதந்திரமாக விளையாட முடியும், இப்படிப்பட்ட நேரத்தில் ரோகித் சர்மா அவருக்கு முழு ஆதரவு அளித்து அவரின் சிறப்பான திறமையை இந்தியாவின் வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. சரியான வீரர்கள், வரிசை:

2023 உலகக் கோப்பைக்கு முன்பாக சரியான வீரர்களை தேர்வு செய்து சரியான வரிசைப்படி விளையாட வைப்பதே ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும் ஏனென்றால் 2019 உலக கோப்பையின் முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தவறான வீரர்கள் தேர்வு மற்றும் தோனி போன்ற வீரர்களை தவறான இடத்தில் களம் இறக்கியதால் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

மேலும் அந்த உலகக் கோப்பைக்கு முன்பாக அப்போதைய கேப்டன் விராட் கோலி மிகச்சரியான வீரர்களை தேர்வு செய்யவில்லை என்றே கூறலாம் எடுத்துக்காட்டாக 2018 முதல் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய போதிலும் உலக கோப்பைக்கு முன்பாக அம்பாத்தி ராயுடுவை தேர்வு செய்யாத விராட் கோலி எக்ஸ்ட்ரா பவுலர் வேண்டும் என்பதற்காக விஜய் சங்கரை தேர்வு செய்து மிகவும் தவறான முடிவை எடுத்தார்.

  • எனவே அதுபோன்ற ஒரு தவறை ரோகித் சர்மா செய்யாமல் சரியான வீரர்களை சரியான இடத்தில் தேர்வு செய்து 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகும்.

3. இளம் வீரர்கள்:

உலக கோப்பைக்கு முன்பாக மூத்த வீரர்களை வைத்து தொடரலாமா அல்லது இளம் வீரர்களை தேர்வு செய்யலாமா என்ற முடிவும் ரோகித் சர்மாவின் கையில் உள்ளது ஏனெனில் ரோகித் விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் ஏற்கனவே 33 வயதை கடந்து விட்டனர். மறுபுறம் ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், பிரிதிவி ஷா, கில் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

Previous Post Next Post

Your Reaction