IND vs SA : கோலிக்கு குட் பை - புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு

சொந்த மண்ணில் நடைபெற்றுவந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ளது, டி20 மற்றும் டெஸ்ட் என 2 தொடர்களிலும் அபாரமாக விளையாடிய இந்தியா நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

Photo Credits : BCCI


இதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியினர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர், முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதி துவங்க இருந்த இந்த சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவுப்பு:

மேலும் வீரர்களின் நலன் கருதி இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறுவதாக இருந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த நிலையில் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது, பின்னர் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று துவங்கிய விஜய் ஹசாரே கோப்பையில் கலக்கக்கூடிய ஒருசில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் வரும் வாரங்களில் தேர்வு செய்யப்பட உள்ளது.

கோலிக்கு குட் பை:

இருப்பினும் அதற்கு முன்பாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக விராட் கோலிக்கு பதில் ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ அதிரடியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கடந்த 2017 முதல் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி தலைமையில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலக கோப்பைகளை இந்தியா வெல்ல தவறியது.

இதனால் ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி சமீபத்தில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார் அவருக்கு பதில் ரோகித் சர்மா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்

  • இந்த வேளையில் அடுத்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை நடைபெற உள்ளதை அடுத்து அதற்கு முன்னதாக புதிய இந்திய அணியை உருவாக்கும் வண்ணம் தற்போது ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விடை பெற்றுள்ளார், அவருக்கு பதில் துணை கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

டெஸ்ட் அணி:

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக வரலாறு படைத்துள்ள விராட் கோலி தொடர்ந்து தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

  • புதிய துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், ஏற்கனவே இருந்த அஜிங்கிய ரஹானே பார்ம் இல்லாத காரணத்தாலும் காயத்தால் அவதிப்படும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் முக்கிய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது இந்த சுற்றுப் பயணம் முழுவதும் காயம் காரணமாக விலகியுள்ளது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இவருடன் சுப்மன் கில், அக்சர் பட்டேல், ராகுல் சஹர் போன்ற முக்கிய வீரர்களும் காயம் காரணமாக விலகியுள்ளார்கள்.

  • இத்துடன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, ஹனுமா விஹாரி போன்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறாத இந்திய வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதோ:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை-கேப்டன்) கேஎல் ராகுல், மயங் அகர்வால், சேடேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (கீப்பர்), வ்ரிடதிமான் சஹா (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின் ஜெயந் யாதவ், இஷாந்த் சர்மா, முகமத் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்டுல் தாகூர், முகமத் சிராஜ். 

Previous Post Next Post

Your Reaction