இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி கடந்த மாதம் விடைபெற்றார், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவரின் பதவிக்காலம் கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் மீண்டும் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றிலேயே அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களில் வெற்றி, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1* முன்னிலை, ஏறக்குறைய 5 வருடங்களாக தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என ரவி சாஸ்திரி தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இமயம் தொட்டது என்றே கூறலாம்.
ஐசிசி உலககோப்பை:
- இருந்தாலும் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட ரவிசாஸ்திரி விராட்கோலி கூட்டணியால் வெல்ல முடியவில்லை.
முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் அணியின் இயக்குனராக ஆரம்பித்தது முதல் தற்போது தலைமை பயிற்சியாளராக விடைபெற்றது வரை இந்திய அணியுடனான பயணம் பற்றிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அவர் மனம் திறந்துள்ளார்.
2019 உலககோப்பை:
அதில் முக்கியமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்தது.
அப்போட்டியில் ரிஷப் பண்ட், ராகுல், தினேஷ் கார்த்திக் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர் மற்றும் அந்த உலகக் கோப்பைக்கு அம்பாதி ராயுடு தேர்வு செய்யப்படாதது பற்றி ரவி சாஸ்திரி,
ராயுடுவை தேர்வு செய்யாதது பற்றி நான் கூறுவதற்கு எதுவுமே இல்லை அதேசமயம் 3 விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. அந்த இடத்தில் அம்பத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், தோனியையும் சேர்த்து தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல விக்கெட் கீப்பர் இல்லை தேர்வு செய்வதில் என்ன லாஜிக் இருந்தது என எனக்கு புரியவில்லை. அந்த அணி தேர்வு செய்தது பற்றி என்னிடம் தேர்வுக்குழுவினர் விவாதிக்கவில்லை மாறாக அணியை தேர்வு செய்து விட்டு அதன்பின் அது பற்றிய கருத்தை மட்டுமே கேட்டனர்
என தெரிவித்த ரவிசாஸ்திரி 2019 உலக கோப்பை அம்பத்தி ராயுடு விளையாடி இருக்க வேண்டும் என கூறினார், மேலும் அந்த உலகக் கோப்பை அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத் அதுபற்றி தன்னிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை என தெரிவித்தார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
5 வருடங்களாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற முடியாததை பற்றி,
இந்த அணி பல முக்கிய தொடர்களை முதல் முறையாக வென்றது ஆனால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாது மிகப்பெரிய ஏமாற்றம். ஒன்றல்ல 2 அல்ல 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை அதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்ல முடியாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது, ஏனென்றால் இந்த அணி கடந்த 6 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்கியது.
அந்த இறுதி போட்டிக்கு முன்பாக நாங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் செல்ல வேண்டி இருந்தது ஆனால் நியூசிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று அந்த கால சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர், எப்படி இருந்தாலும் 60 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லை என்ற நிலையில் தொடங்கிய நாம் அந்த போட்டியை குறைந்தபட்சம் ட்ரா செய்திருக்க வேண்டும்.
அதேபோல் 2021 டி20 உலகக் கோப்பை பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை ஏனெனில் அதில் நாம் சிறந்த அணியை பெற்றிருக்கவில்லை இருப்பினும் 2019 உலக கோப்பை தோல்வி கடினமான ஏமாற்றமாகும், குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் நாம் மிகச்சிறப்பாக தொடங்கிய போதிலும் அடுத்த நாளில் சிறப்பாக முடிக்க முடியவில்லை
என கூறிய ரவிசாஸ்திரி உலக கோப்பையை வெல்ல விட்டாலும் இந்திய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது என கூறினார். குறிப்பாக இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களிடம் கடந்த 3 வருடங்களில் யார் சிறந்த அணி எனக் கேட்டால் அவர்கள் இந்தியா என கூறுவார்கள் எனவும் தெரிவித்தார்.