கடந்த 1882 ஆம் ஆண்டு முதல் 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் நடைபெற்று வரும் பழமை மிகுந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 71வது முறையாக 2021/22 ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது, கிரிக்கெட்டின் முதல் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் காலம் காலமாக கௌரவமாக கருதப்படும ஆஷஸ் கோப்பைக்காக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கோலாகலமாக தொடங்க உள்ளது, இந்த கோப்பையை வெல்வதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் கடும் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வதால் ஒவ்வொரு போட்டியின் 5 நாட்களும் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்பதால் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இது தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஜாம்பவான்கள்:
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டான் பிராட்மேன், ஹோப்ஸ், வாலி ஹமூத், ஷேன் வார்னே, மெக்ராத், ஆண்டர்சன் உள்ளிட்ட பல மகத்தான ஜாம்பவான்கள் வரலாற்றில் ஆஷஸ் கோப்பைக்காக விளையாடி உள்ளார்கள். அந்த வகையில் ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப்-5 வீரர்கள் பற்றி பார்ப்போம்:
டாப் 5 ரன்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் கண்ட மகத்தான ஜாம்பவான் டான் பிராட்மேன் ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக இன்றும் திகழ்கிறார்.
- சர் டான் ப்ராட்மேன் (ஆஸ்திரேலியா) : 5028 ரன்கள்
- ஜேக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) : 3636 ரன்கள்
- ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) : 3222 ரன்கள்
- ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) : 3177 ரன்கள்
- டேவிட் கோவேர் (இங்கிலாந்து) : 3037 ரன்கள்
டாப் 5 சதங்கள்:
ரன்களை போலவே அதிக சதங்கள் விளாசிய பேட்டர்களின் பட்டியலிலும் சர் டான் பிராட்மன் முதல் இடத்தில் இன்றும் ஜொலிக்கிறார்.
- சர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) : 19 சதங்கள்
- ஜேக் கோப்ஸ் (இங்கிலாந்து) : 12 சதங்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) : 11 சதங்கள்
- ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) : 10 சதங்கள்
- வாலி ஹமூத்/டேவிட் கோவேர் (இங்கிலாந்து) : தலா 9 சதங்கள்
டாப் 5 விக்கெட்கள்:
உலகின் தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் முக்கியவரான ஷேன் வார்னே ஆஷஸ் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.
- ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) : 195 விக்கெட்கள்
- கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) : 157
- ட்ரம்பெல் (ஆஸ்திரேலியா) : 141 விக்கெட்கள்
- டென்னிஸ் லில்லி (ஆஸ்திரேலியா) : 128 விக்கெட்கள்
- இயன் பொத்தாம் (இங்கிலாந்து) : 128 விக்கெட்கள்
5 விக்கெட்கள் ஹால்:
ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட் ஹாஸ் எடுத்த பவுலராக இங்கிலாந்தின் "சிட்னி பெர்ன்ஸ்" 12 முறை 5 விக்கெட்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
2வது ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, க்ரீம்மெட், டர்னர், அண்டர்மேன் மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 11 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளனர்.