IND vs NZ 2nd Test 2021 : வான்கடேவில் வெல்லுமா இந்தியா - புள்ளிவிவரம், பிட்ச் - வெதர் ரிப்போர்ட்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி டிசெம்பர் 3ஆம் தேதி புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது.

Photo Credits : Getty Images


போட்டி விவரம்:

இந்தியா V நியூஸிலாந்து, 2வது டெஸ்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.

டிசம்பர் 3 - 7, காலை 9.30 மணி, வான்கடே மைதானம், மும்பை.

முன்னோட்டம்:

கான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் வெறும் 1 விக்கெட்டை எடுக்க தவறிய இந்தியா நூலிழையில் வெற்றியை கோட்டை விட்டது, மறுபுறம் கான்பூர் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க போராடிய நியூசிலாந்து டிரா செய்து வெற்றி கண்டது.

எனவே மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1 - 0 என தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரமாகப் போராட உள்ளது, அதேபோல கான்பூர் டெஸ்டில் தன்னை டெஸ்ட் சாம்பியன் என நிரூபித்த நியூசிலாந்து இப்போட்டியில் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து 20ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க தயாராக உள்ளது.

இந்தியா : முதல் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருந்த காரணத்தால் இந்திய அணியால் 400 ரன்களை கூட தொட முடியவில்லை, 2 இன்னிங்ஸ்களிலும் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்புடன் விளையாடியதன் காரணமாக இந்தியா தப்பியது என்றே கூற வேண்டும்.

புஜாரா, ரகானே போன்ற இந்தியாவின் அனுபவங்கள் ரன்கள் குவிக்க திணறுவது இந்தியாவை பின்னடைய செய்கிறது, எனவே மும்பை டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் பேட்டிங் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

பந்துவீச்சில் அஷ்வின், அக்சர், ஜடேஜா என சுழல் பந்து வீச்சு அபாரமாக செயல்படும் போதிலும் நியூசிலாந்து அளவுக்கு இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க முடியாதது பின்னடைவாகும்.

நியூஸிலாந்து: நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஓப்பனிங் வீரர்களான லாதம் மற்றும் வில் எங் ஆகியோரைத் தவிர இதர வீரர்கள் சொதப்பினார். எனவே வெற்றிக்கு கேன் வில்லியம்சன், ராஸ் டைய்லர் உட்பட அனுபவ வீரர்களும் பொறுப்புணர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும்.

அந்த அணியில் டிம் சவுத்தி, கைல் ஜமிசன் என வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் போதிலும் சுழல் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

புள்ளிவிவரம்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த 2 அணிகளும் இதுவரை 61 போட்டிகளில் மோதியுள்ளன.

அவற்றில் இந்தியா 21 போட்டிகளிலும் நியூசிலாந்து 13 போட்டிகளிலும் வென்றன, 27 போட்டிகள் டிராவில் முடிந்தன.

  • இப்போட்டி நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் 35 போட்டிகளில் இதற்கு முன் மோதியுள்ளன, அதில் 16 முறை இந்தியா வென்று வலுவாக உள்ளது. நியூசிலாந்து 2 முறை மட்டுமே வென்றது, 17 போட்டிகள் டிராவில் முடிந்தன.
  • குறிப்பாக நியூஸிலாந்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் இந்தியா களம் இறங்கிய 2 போட்டிகளில் 1 வெற்றியையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

தற்போது மும்பையில் மழை காலம் என்பதால் இந்த போட்டியின் முதல் நாள் மழையால் தடைபட குறைந்த அளவான வாய்ப்புள்ளது, குறிப்பாக நேற்று முன்தினம் இப்போட்டிக்கு தயாராகும் வண்ணம் இந்தியா - நியூசிலாந்து அணி வீரர்கள் ஈடுபட இருந்த வலை பயிற்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. 

இருப்பினும் இதர நாட்களில் மழை வாய்ப்பு குறைவு என எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

வான்கடே பிட்சில் சில தினங்களுக்கு முன்பு இருந்த பச்சை பொருட்கள் இன்று முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால் மைதானம் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சம அளவில் கைகொடுக்கும் என நம்பலாம்.

வியாழக்கிழமை பெய்த மழையால் பிட்ச் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளதால் பிட்சில் தங்கி இருக்கும் ஈரப்பதம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயமாக உதவும், கான்பூர் போல முதல் சில நாட்களில் பேட்டிங்க்கும் கடைசி சில நாட்களில் சுழல் பந்து வீச்சுக்கும் இம்மைதானம் அதிகமாக கை கொடுக்கலாம்.

உத்தேச இந்திய அணி:

இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலி திரும்புவதால் யாரை நீக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது, பார்ம் இன்றி தவிக்கும் புஜாரா மற்றும் ரஹானேவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டு வரும் இசாந்த் சர்மாவுக்கு பதில் முகம்மது சிராஜ் அணிக்கு திரும்பலாம்.

சுப்மன் கில், மயங் அகர்வால், செடேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கிய ரகானே, ஷ்ரேயஸ் ஐயர்,வ்ரிதிமான் சஹா (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சார் படேல், உமேஷ் யாதவ், முஹம்மது சிராஜ்.

Previous Post Next Post

Your Reaction