பர்சன்டேஜ் பாருங்க - விராட் கோலிக்கு பதில் ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் ! கங்குலி பளிச் பதில்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார், அவருக்கு பதில் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Photo Credits : Getty Images


2017 முதல் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலியின் தலைமையில் இந்தியா சொந்த மண் மற்றும் அயல்நாட்டு மண்ணில் நடைபெற்ற நேருக்கு நேர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் உலக கோப்பையை வெல்ல தவறியது, இதுவே விராட் கோலியின் கேப்டன் பதவி பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது.

ரசிகர்கள் கோபம்:

என்னதான் இருந்தாலும் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்கும் பற்றிய முடிவை ட்விட்டரில் ஒரு சாதாரண ட்வீட் வாயிலாக பிசிசிஐ அறிவித்தது விராட் கோலியின் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது, கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் ஒருநாள் கேப்டனாக பல வெற்றிகளுக்கு வித்திட்ட விராட் கோலியை இவ்வளவு மோசமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி இருக்க கூடாது என வல்லுனர்களும் இந்திய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

  • குறிப்பாக "ஷேம்ஆன்பிசிசிஐ" என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்த விராட் கோலியின் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மோசமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
  • இதனால் வேறுவழியின்றி அதற்கு சப்பைக்கட்டு கட்டும் வகையில் ஏறக்குறைய 12 மணிநேரங்கள் கழித்து விராட் கோலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பிசிசிஐயின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிடப்பட்டது.

சௌரவ் கங்குலி பதில்:

இந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏன் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளார் என்ற முக்கியமான கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தியில் பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில்,

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டது ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, இருப்பினும் இந்திய தேர்வு குழுவினர் ஒருநாள் மற்றும் டி20 என வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் வேண்டாம் என கருதினார்கள், இந்த வேளையில் விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவார்

என கூறினார். டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்ந்து செயல் படுவேன் என விராட் கோலி தெரிவித்து இருந்தார் ஆனால் அதற்கு இந்திய தேர்வு குழுவினர் ஆட்சேபனை தெரிவித்ததுடன் டி20, ஒருநாள் ஆகிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மாவை முழு நேர கேப்டனாக நியமிக்க முக்கிய புள்ளியாக செயல்பட்டது இதிலிருந்து தெரியவருகிறது.

பர்சென்டேஜ் பாருங்க:

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் நியமனம் பற்றி கங்குலி கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் ரோகித் சர்மாவின் தலைமையில் நம்பிக்கை கொண்டுள்ளோம், விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பெர்சண்டேஜ் பற்றி நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் ஆனால் குறைவான போட்டிகளாக இருந்தாலும் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்ஷிப் பெர்ஸன்டேஜ் அதை விட மிகச் சிறப்பாக உள்ளது. அத்துடன் வெள்ளை பந்துக்கு என்று 2 வெவ்வேறு கேப்டன்கள் இருக்க முடியாது

என தெரிவித்த கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளதாலும் அவர் மீது உள்ள நம்பிக்கையாலும் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

  • கங்குலி கூறுவதன் அடிப்படையில் பார்க்கும் போது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதற்கு முன்னர் 10 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்து 8 வெற்றிகளை 80% என்ற சிறப்பான விகிதத்தில் குவித்துள்ளார், மறுபுறம் விராட் கோலி 95 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்து 70.42% என்ற விகிதத்தில் வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

Previous Post Next Post

Your Reaction