பாபர் அசாம் உள்ளே ! கிரிக்கெட்டின் புதிய ஃபேப் 4 அறிவித்த ஜாம்பவான் வாசிம் அக்ரம்

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை, அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் எத்தனையோ பேட்டர்கள் இருந்தாலும் எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் எவ்வளவு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களாக இருந்தாலும் அவர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்து தனது அணிக்கு வெற்றிகளை தேடித் தந்து வரும் 4 வீரர்களை "பேப் 4" என ஜாம்பவான்களும் ரசிகர்களும் அழைத்து வருகின்றனர்.

Babar Azam | Getty


பேப் 4 வீரர்கள்:

அந்த வரிசையில் கடந்த 10 வருடங்களாக உலக கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளங்கி வரும் இந்தியாவின் விராட் கோலி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரை 4 மிக சிறந்த வீரர்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக இந்த 4 தரமான வீரர்களில் ஒரு சிலர் பார்ம் இல்லாமல் ரன்கள் குவிக்க திணறி வருகிறார்கள், அதில் குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வருகிறார்.

  • இதனால் அந்த ஒரு சில வீரர்களுக்கு பதில் அவர்களை விட சமீபகாலங்களாக சிறந்து விளங்கும் வேறு ஒரு சில வீரர்களை வைத்து பேப் 4 என பல ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

வாசிம் அக்ரம்:

அந்த வரிசையில் தற்போதைய நிலையில் உலகில் சிறந்து விளங்கும் 4 தலை சிறந்த வீரர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாம்பவான் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி நியூஸ் 360 பக்கத்தில் அவர் பேசுகையில்,

அவர் (பாபர் அசாம்) சரியான பாதைகளில் கடந்து வந்துள்ளார், கராச்சி கிங்ஸ் அணியில் நானும் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் எப்போதும் தனது வேலையில் கூர்மையாக இருப்பதுடன் தனது செயல்பாட்டில் திருப்தி அடைந்தது இல்லை, இதுதான் ஒரு நல்ல லீடருக்கு உள்ள குணமாகும், அவரிடம் உள்ள திறமைக்கு அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படக் கூடியவர் என எனக்கு தெரியும்.

என கூறினார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் கேப்டனாக உள்ள கராச்சி கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் வாசிம் அக்ரம் இருந்து வருகிறார், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அவரை அருகிலிருந்து பார்ப்பதாலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது அவர் பேப் 4 வீரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். விராட் கோலி, ஜோ ரூட், டேவிட் வார்னர் ஆகியோருடன் பாபர் அசாமும் உச்சத்தில் உள்ளார், அவருடன் விராட் கோலியும் உள்ளார். ஜாவித் மியான்தத், இன்சமாம்-உல்-ஹக், யூனிஸ் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் தற்போது பாபரும் இணைந்துள்ளார், 21வது நூற்றாண்டில் பாகிஸ்தானின் மிகச்சிறந்த வீரர் பாபர் அசாம் என்பதில் சந்தேகமில்லை, அவர் செல்லும் பாதை இன்னும் நிறைய உள்ளது

என இது பற்றி மேலும் பேசிய வாசிம் அக்ரம் தற்போதைய தேதியில் உலகில் உள்ள 4 தரமான வீரர்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார், ஏற்கனவே இருந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு பதில் பாபர் அசாம் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை வாசிம் அக்ரம் தேர்ந்தெடுத்துள்ளார்.

கலக்கும் பாபர் அசாம்:

வாசிம் அக்ரம் தேர்வு செய்யும் அளவுக்கு அவரும் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றே கூற வேண்டும் ஏனெனில் தற்போது டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் டாப் 10 பேட்ஸ்மேன்களில் பாபர் அசாம் மட்டும் தான் உள்ளார்.

  • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவர் டி20 தரவரிசையில் 3வது இடத்திலும் டெஸ்ட் பேட்டிங் தர வரிசையில் 9வது இடத்திலும் ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction