ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் 2021/22 தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது.
Gabba Cricket Ground, Brisbane |
5 போட்டிகள் கொண்ட இந்த சிறப்பு மிக்க தொடரின் முதல் போட்டி டிசம்பர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டி விவரம்:
ஆஸ்திரேலியா V இங்கிலாந்து, முதல் ஆஷஸ் டெஸ்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.
இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி, டிசம்பர் 8 - 12, காபா, பிரிஸ்பேன்.
நேரடி ஒளிபரப்பு:
சோனி டென் நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் மொபைல் ஆப்.
முன்னோட்டம்:
நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை விட பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்தத் தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2 - 2 என சமனில் முடிவடைந்ததால் அதற்கு முந்தைய தொடரை வென்ற ஆஸ்திரேலியா தற்போதைய சாம்பியனாக உள்ளது, எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல இங்கிலாந்தும் போராட உள்ளது.
இந்தியாவிடம் அடி வாங்கிய ஆஸ்திரேலியா & இங்கிலாந்து:
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை புதிய கேப்டன் பட் கம்மின்ஸ் தலைமையில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது இருப்பினும் கடைசியாக கடந்த ஜனவரியில் சொந்த mமண்ணில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 2 - 1 என டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்துள்ளது.
எனவே அந்தத் தொடரில் பெற்ற பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டு டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்ற தயாராகி உள்ளது.
இங்கிலாந்து:
மறுபுறம் ஆஸ்திரேலியாவை போலவே கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 - 1 என இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது ஆனாலும் தற்போது இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது பலத்தை சேர்க்கிறது.
ரூட், பிராட், பட்லர் என நட்சத்திரங்களைக் கொண்ட இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்ல தயாராக உள்ளது.
புள்ளிவிவரம்:
- வரலாற்றில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் ஒட்டுமொத்தமாக 351 ஒரு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 146 போட்டிகளில் வென்றுள்ளது, இங்கிலாந்து 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்தன.
கலக்கல் காபா:
இப்போட்டி நடக்கும் காபா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை என்றே கூறலாம் ஏனெனில் கடைசியாக கடந்த 1988 க்கு பின் 32 வருடங்களாக தொடர்ந்து இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வந்தது.
- ஆனால் அந்த வெற்றி நடைக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது போட்டியில் இந்தியா முற்றுப்புள்ளி வைத்து காபா மைதானத்தில் இந்தியாவின் கொடியை பறக்க விட்டது இந்திய ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
- இந்த 2 அணிகளை பொருத்தவரை இந்த மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்து கடந்த 1986-ம் ஆண்டு வெற்றி பெற்றது, அதன்பின் இதுவரை ஆஸ்திரேலியா வெற்றி வெற்றி பெற்று வருகிறது
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் காபா மைதானம் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் போட்டி நாட்களின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது, குறிப்பாக 1, 2, 3, 5 ஆகிய நாட்களில் மழையால் 50% க்கும் மேற்பட்ட போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- இதர நாட்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் இந்த போட்டியின் முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
போட்டி நடைபெறும் காபா மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது, வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட் போல முதல் 2 - 3 நாட்களில் கண்டிப்பாக பொறுப்புடன் விளையாடும் பேட்டர்கள் ரன்கள் குவிக்கலாம், இருப்பினும் ஆஸ்திரேலியாவில் பொதுவாகவே இருக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் இந்த மைதானத்திலும் இருக்கும் என்பதால் ஆரம்பம் முதலே திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
இங்கு இதற்குமுன் சுழல் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் 86% அதிக விக்கெட்டுகளை எடுத்ததில் இருந்தே இம்மைதானம் சுழல் பந்துவீச்சை விட வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக கைகொடுக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
- மேலும் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 273 ஆகும்.
அத்துடன் போட்டியின்போது மழைக்கான வாய்ப்பு இருப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.
உத்தேச அணிகள்:
முதல் ஆஷஸ் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்க பட்டுள்ளது
ஆஸ்திரேலியா:
மர்கஸ் ஹரிஷ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசங்கே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெஸ் கேரி (கீப்பர்), பட் கமின்ஸ் (கேப்டன்), மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நாதன் லயன்.
இங்கிலாந்து:
ரோரி பர்ன்ஸ், ஹமீது, டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்ட்டோ, ஜோஸ் பட்லர் (கீப்பர்), ஓலி ராபின்சன், மார்க் வுட், ஸ்டுவர்ட் பிராட்/ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச்.