இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 - 0 என கைப்பற்றி அசத்தியது, முன்னதாக கடந்த நவம்பர் 25ஆம் தேதி கான்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி பரபரப்புக்கு மத்தியில் டிராவில் முடிந்தது.
Photo Credits : BCCI |
இதை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 3ஆம் தேதியன்று தொடங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக இந்தியாவிற்கு மயங்க் அகர்வால் சதம் அடித்த 150 ரன்கள் எடுத்தார்.
அஜஸ் படேல் உலகசாதனை:
நியூஸிலாந்து சார்பில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளரான அஜஸ் படேல் எடுத்து உலக சாதனை படைத்தார், அதைக் கொண்டாடி முடிப்பதற்குள் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து இந்தியா 62 ரன்களுக்குள் சுருட்டி பதிலடி கொடுத்தது.
அதன்பின் பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 276/6 ரன்களில் டிக்ளேர் செய்து நியூசிலாந்து வெற்றி பெற 540 என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது, இறுதியில் எதிர்பார்த்தது போலவே கடைசி இன்னிங்சிலும் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நியூசிலாந்து 372 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.
அஜஸ் படேல் சாதனை பட்டியல்:
இப்போட்டியில் படுதோல்வி அடைந்த போதிலும் 10 விக்கெட்டுகள் எடுத்த நியூசிலாந்தின் அஜஸ் படேல் பல சாதனைகளைப் படைத்தார், இந்தியாவின் மும்பை நகரில் பிறந்து பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து தற்போது அங்கு விளையாடி வரும் அவர் அதே மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக சாதனை படைத்துள்ளது ஆச்சரியமான அம்சமாகும்.
சரி இப்போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல் இதோ:
1. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் எடுத்த அஜஸ் படேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்த 3வது பவுவலர் என்ற உலக சாதனை படைத்தார்.
- அத்துடன் 10 விக்கெட்களை எடுத்த முதல் நியூஸிலாந்து பவுலர் மற்றும் 21ம் நூற்றாண்டில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார.
- 10 - 53, ஜிம் லேகர் (இங்கிலாந்து), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மான்செஸ்டர், 1956
- 10 - 74, அனில் கும்ப்ளே (இந்தியா), பாகிஸ்தானுக்கு எதிராக, டெல்லி, 1998.
- 10 - 119, அஜஸ் படேல் (நியூஸிலாந்து), இந்தியாவுக்கு எதிராக, மும்பை, 2021*.
2. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் பவுவலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.
- இதற்கு முன் ஜிம் லேகர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் தங்களது சொந்த மண்ணில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுவலர் என்ற சாதனையை அவர் படைத்தார், இதற்கு முன் ஜிம்மில் ஏக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் 2வது இன்னிங்சில் தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.
- பொதுவாக முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கும் 2வது இன்னிங்ஸ் பவுலிங்க்கும் பிட்ச் சாதகமாக இருக்கும், அப்படிப்பட்ட பேட்டிக்கு சாதகமான முதல் இன்னிங்சில் அஜஸ் படேல் 10 விக்கெட்டுகளை எடுத்தது நிச்சயம் பாராட்டுக்குரிய அம்சமாகும்.
4. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய போதிலும் நியூசிலாந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது, இதன் வாயிலாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த ஒரு போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற பெயரும் அவரை சேர்ந்து அடைந்தது.
- இதற்கு முன் ஜிம் லேகர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் 10 விக்கெட்டுகள் எடுத்த போது முறையே இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
5. முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்து அவர் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் இப்போட்டியில் 14 விக்கெட்டுகளை சாய்த்தார், இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற புதிய வரலாற்றையும் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வெளிநாட்டு பவுலர்கள்:
- அஜஸ் படேல் (நியூஸிலாந்து): 14/225, மும்பை, 2021*
- இயன் போதம் (இங்கிலாந்து): 13/106, மும்பை, 1980.
- ஸ்டீவ் ஓ'காபி (ஆஸ்திரேலியா): 12/70, புனே, 1970.
6. இத்துடன் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த நியூசிலாந்து பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
7. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2வது பவுலர் என்ற சாதனையை ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லி பின் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர்கள்:
- ரிச்சர்ட் ஹாட்லீ : 15/123
- அஜஸ் படேல் : 14/225
- டானியல் வெட்டோரி : 12/149