T20 World Cup 2021 : சாம்பியன் ஆஸ்திரேலியா முதல் தோல்வியடைந்த நியூசி, இந்தியா வரை - வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரம் இதோ

துபாயில் நடைபெற்ற வரலாற்றின் 7வது ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்று வரலாறு படைத்துள்ளது, முன்னதாக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கிய இந்த உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெற்றன.

Photo Credits : Getty Images


இதில் முதலில் பரபரப்பாக நடைபெற்ற சூப்பர் 12 சுற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் நடந்த முதல் 2 போட்டிகளில் பரிதாபமாக தோற்றதால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

  • அதேபோல் நடப்பு சாம்பியனாக இருந்த கிரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

அரை இறுதி :

இருப்பினும் அரையிறுதியில் கலக்கிய இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தின.

பின்னர் நடைபெற்ற அரையிறுதி தொடரின் முதல் போட்டியில் வலுவான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி வெளியேற்றி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையாமல் வெற்றி நடைபோட்ட பாகிஸ்தானை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சாம்பியன் :

இதை தொடர்ந்து துபாயில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது, மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

பரிசு தொகை :

சரி இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் தோல்வி அடைந்த அணி வரை ஒவ்வொரு அணிகளுக்கும் கொடுக்கப்பட்ட பரிசுத்தொகை பற்றி பார்ப்போம்:

வின்னர் : ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ரன்னர் : இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி பெற்று 2வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

அரைஇறுதி : இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்று வரை முன்னேறி தோல்வி பெற்று 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 12 சுற்று :

இந்த உலக கோப்பையின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றில் இடம் பிடித்துள்ள 12 அணிகளும் இந்த சூப்பர் 12 சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 30 லட்சம் ரூபாய் போனஸ் பரிசு தொகையாக வழங்க பட்டுள்ளது.

  • இந்த சூப்பர் 12 சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய 12 அணிகள் விளையாடின.
  • அந்த வகையில் இந்த சூப்பர் 12 சுற்றி இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்ததால் 90 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

இது மட்டுமல்லாமல் சூப்பர் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 52.59 லட்சம் ஆறுதல் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

Photo : Getty


அந்த வரிசையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, தென் ஆப்பிரிக்கா இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா 52.59 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று: அதே போல முதல் சுற்றில் பங்கேற்ற அணிகள் அந்த சுற்றில் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 30 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது, இந்த முதல் சுற்றில் இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

முதல் சுற்றில் இந்த அணிகள் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 30 லட்சம் பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction