இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2021-22 கிரிக்கெட் தொடர் 13 வது முறையாக நேற்று தீபாவளி தினத்தன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது.
Photo : BCCI Domestic |
இதில் நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் முன்னணி 38 அணிகள் பங்கு பெறுகின்றன.
தமிழ்நாடு - ஒடிசா :
இந்த தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு தனது 2வது போட்டியில் ஒடிசாவை எதிர்கொண்டது, லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஒடிசா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடுக்கு ஹரி நிஷாந்த் 11 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 37 ரன்கள் எடுத்தார்.
அடுத்து அந்த சாய் சுதர்சன் 25 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க நட்சத்திர வீரர் பாபா அபராஜித் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 44* ரன்கள் எடுத்தார், இறுதியில் முகமது வெறும் 18 பந்துகளில் 27* ரன்கள் எடுத்து பினிஷிங் செய்ய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தமிழ்நாடு 165/5 ரன்கள் எடுத்தது.
ஒடிசா சார்பில் ரௌட் 2 விக்கெட்களும் மற்றும் அபிஷேக், ஆஷிஷ் ராய், ஜயந்த பெஹ்ரா தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.
ஒடிசா அதிரடி :
பின் 166 என்ற இலக்கை துரத்திய களமிறங்கிய ஒடிசா அணிக்கு தொடக்க வீரர்கள் டுபார் 12 ரன்களிலும் அன்ஷுமன் ராத் 8 ரன்களிலும் அடுத்தடுத்து தமிழ் நாட்டின் சிறப்பான பந்து வீச்சில் அவுட் ஆகி ஏமாற்றம் அடித்தார்கள் ஆனால் 3வதாக களமிறங்கிய சேனாதிபதி 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து அசத்தினார், இவருடன் 4வதாக களமிறங்கிய கோவிந்தா 22 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க 13.1 ஓவரில் ஒடிசா 93/2 என்ற நல்ல நிலையில் இருந்த போது முக்கியமான நேரத்தில் அவுட் ஆனார்.
- கிடைத்த வாய்பை பயன் படுத்திய தமிழ்நாடு பவுலர்கள் அடுத்து வந்த அபிஷேக் யாதவை டக் அவுட் செய்தனர், ஆனால் பின்னர் களமிறங்கிய அபிஷேக் ரவுட் அதிரடியாக பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார்.
சர்ச்சையில் த்ரில் வெற்றி :
இதனால் வெற்றி இலக்கை ஒடிசா கிட்டத்தட்ட நெருங்கிய வேளையில் கடைசி ஓவரை நடராஜன் வீசினார், கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது ஒடிசா அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, கடைசிப் பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது அபிஷேக் ரவுட் பவுண்டரி மட்டுமே அடித்தார், இதனால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு திரில் வெற்றி பெற்றது.
இருப்பினும் 19.3 வது ஓவரில் அபிஷேக் ரௌட் அடித்த பவுண்டரியை தமிழக வீரர் முருகன் அஸ்வின் தடுக்க முயன்ற போதிலும் அது பவுண்டரி எல்லைக்கோட்டை நெருங்கியது ஆனால் அம்பயர்கள் அதை சரியாக கவனிக்காத காரணத்தால் ஒடிசா பரிதாபமாக தோல்வி அடைந்தது, இது பற்றி இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு 2 வெற்றிகள் :
எப்படி இருந்தாலும் இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு ஏற்கனவே தனது முதல் போட்டியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது, இதன் காரணமாக சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்று எலைட் குரூப் ஏ பிரிவு புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
- இதை அடுத்து தமிழ்நாடு தனது 3வது போட்டியில் பக்கத்து ஊரான பாண்டிச்சேரியை லக்னோ நகரில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதாவது நவம்பர் 6ஆம் தேதி மதியம் 1 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது.