IND vs NZ Test Series 2021: காரணமின்றி கழட்டிவிடப்பட்ட 3 வீரர்கள்

துபாயில் நடைபெற்று முடிவுக்கு வர இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் படுமோசமாக தோல்வி அடைந்த இந்தியா வெறுங்கையுடன் நாடு திரும்பி உள்ளது, இதை அடுத்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா சந்திக்க உள்ளது.

Photo Credits : Getty Images


புதிய கேப்டன், பயிற்சியாளர் :

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், அதேபோல் பதவிக்காலம் முடிந்து விடை பெற்றுள்ள ரவி சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 இந்திய அணி:

இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

  • இந்த நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ருத்ராஜ் கைக்வாட், ஹர்சல் படேல், அவேஷ் கான் உள்ளிட்ட சமீபத்திய ஐபிஎல் தொடரில் கலக்கிய சில இளம் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக வரும் நவம்பர் 25 ஆம் தேதி துவங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஓய்வெடுத்து விட்டு 2வது போட்டிக்கு கேப்டன் விராட் கோலி திரும்புவதால் அவருக்கு பதில் முதல் போட்டியில் அஜிங்கிய ரஹானே கேப்டன்சிப் செய்ய உள்ளார், புஜாரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

  • முக்கிய வீரர்கள் ரோகித் சர்மா, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர்,ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கேஎஸ் பரத், ஜெயந்த் யாதவ் போன்ற சில வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டாலும் காரணமே இல்லாமல் சில வீரர்கள் கழட்டிவிட்ட பட்டுள்ளனர்.அவர்கள் :

1. ஹனுமா விஹாரி:

இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் அனுபவ டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்படாதது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது ஏனெனில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் ஹனுமா விஹாரி கண்டிப்பாக விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அவருக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்து பிசிசிஐ அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் தூணாக செயல்பட்டு வந்த ஹனுமா விஹாரி கடந்த ஜனவரியில் சிட்னி நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் 3வது போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்து இந்தியா தோல்வி அடைய இருந்த போட்டியை போராடி டிரா செய்தார்.

அந்த போராட்ட போட்டியின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள போதிலும் அவரை காரணமின்றி இந்திய தேர்வுக்குழு கழற்றிவிட்டுள்ளது.

  • இத்தனைக்கும் இதற்கு முன் அவர் இந்திய மண்ணில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே பங்கேற்றுள்ளார், அவர் இந்தியாவில் நடைபெற்றுள்ள முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 21 சதங்கள் உட்பட 7261 ரன்களை 55 என்ற சிறப்பான சராசரியில் குவித்துள்ளார்.

இதுபற்றி ஹர்ஷா போக்லே உட்பட சில நட்சத்திரங்களும் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் வறுத்தெடுக்க வேறு வழியின்றி விரைவில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் இந்தியா ஏ - தென்ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரில் ஹனுமா விஹாரியின் பெயரை சேர்த்து பிசிசிஐ சப்பைக்கட்டு கட்டிள்ளது.

2. சூரியகுமார் யாதவ்:

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ் அந்த தொடரில் விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பின்னர் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் காரணமே இல்லாமல் அவரின் இடம் பறிக்கப்பட்டுள்ளது, ஆறுதலாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஏ அணியில் கூட இடம் கொடுக்காமல் பிசிசிஐ அவரை கழட்டிவிட்டு உள்ளது.

3. ஜெயதேவ் உனட்கட்:

சிலருக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் காலம் கடந்து விட்டால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது அந்த பட்டியலில் ஜெயதேவ் உனட்கட் சேர்ந்துள்ளார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2019/20 சீசன் ரஞ்சி கோப்பையில் 67 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

  • அது மட்டுமில்லாமல் அவர் விளையாடிய சவுராஷ்டிரா அணிக்கு கேப்டன்சிப் செய்து கோப்பையையும் வென்று கொடுத்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு அதற்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவரை பிசிசிஐ இந்திய ஏ அணியில் கூட தேர்வு செய்யாதது அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Post Next Post

Your Reaction