வாழ்வில் எந்த ஒரு துறையாக இருந்தாலும் ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது, அதிர்ஷ்டம் இருக்கும் சிலர் சிறிய விஷயத்தை வைத்து கூட பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத சிலர் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் கூட வெற்றி பெற முடியாது.
Photo : Getty Images |
அதற்கு இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி அல்ல கேப்டன் விராட் கோலி என்பவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எட்டாத ஐபிஎல் கனி :
கடந்த 2013 முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வந்த விராட் கோலி ஒரு முறை கூட கேப்டனாக அந்த அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை, இதனால் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்ட போதிலும் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து கேப்டன்ஷிப் செய்து வந்த விராட் கோலி திடீரென்று ஐபிஎல் 2021 தொடருடன் விலகுவதாக அறிவித்தார்.
- இத்தனைக்கும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
பெங்களூர் அணிக்காக பேட்டிங் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்பு இதோ:
- போட்டிகள் - 139, ரன்கள் - 4811, சராசரி - 42.07, சதங்கள் - 5, அரை சதங்கள் - 36.
குறிப்பாக 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 976 ரன்களைக் குவித்து பெங்களூருவை தனி ஒருவனாக அந்த வருடத்தின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார் ஆனால் இறுதிப்போட்டியில் ஒரு சிறிய அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது.
இதிலிருந்து ஐபிஎல் கோப்பையை விராட் கோலி வெல்வதற்கு தகுதியானவர் என்பதும் ஆனால் ஒரு சில விஷயங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் போக அவரால் அந்த கனியை கடைசிவரை எட்ட முடியாமல் போனதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் பெங்களூரு :
- போட்டிகள் - 140, வெற்றிகள் - 64, தோல்விகள் - 69, டை / முடிவு இல்லை - 7, வெற்றி விகிதம் - 48.67.
கடைசி வரை எட்டாத டி20 கனவு:
இந்த வேளையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது, இதனால் முதலும் கடைசி முறையாக இந்தியாவிற்காக டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் செய்த கேப்டன் விராட் கோலியின் "ஒரு டி20 கோப்பை" என்ற கனவு கடைசிவரை வெறும் கனவாகவே போனது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் கேப்டனாக விராட் கோலி :
- போட்டிகள் - 46
- ரன்கள் - 1570
- சராசரி - 47.57
விராட் கோலி தலைமையில் இந்தியா:
- போட்டிகள் - 50
- வெற்றிகள் - 32
- தோல்விகள் - 16
- வெற்றிவிகிதம் - 64.58%
இந்தியாவிற்காகவும் ஒரு கேப்டனாக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்த போதிலும் ஒரு சில அம்சங்களில் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் விராட் கோலியால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
அதிர்ஷ்டம் இல்லா விராட் கோலி :
சரி எதை வைத்து விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம், நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலககோப்பை 2021 தொடரில் 90% போட்டிகளின் வெற்றியை டாஸ் தான் தீர்மானிக்கிறது என உங்களுக்குத் தெரியும் அல்லவா எனவே அதுதான் இந்த கேள்விக்கான பதிலாகும்.
ஆம் கிரிக்கெட்டில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வது, மலைபோல ரன்கள் குவிப்பது, அதிரடியாக விக்கெட்டுகள் வீழ்த்துவது, மின்னல் வேகத்தில் பீல்டிங் செய்வது என அனைத்தும் திறமையால் வெற்றி கொள்ளலாம் ஆனால் டாஸ் வெல்வதற்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கண்டிப்பாக வேண்டும்.
- ஏனெனில் பூவா தலையா எனப்படும் நாணயத்தை மேலே தூக்கி எறிந்தால் அது பூமியில் விழும் போது நம்மிடம் திறமை இருந்தால் மட்டும் நமக்கு சாதகமாக விழுந்து விடாது.
டாஸ் எனும் அதிர்ஷ்டம்:
சில கேப்டன்களுக்கு டாஸ் என்பது அதிர்ஷ்டமாக எப்போதும் கை கொடுக்கும் சில கேப்டனுக்கு டாஸ் என்பது சுத்தமாக கைகொடுக்காமல் தோல்வியை பரிசளிக்கும், இதில் விராட் கோலி 2வது ரகமாகும்.
Photo : BCCI/IPL |
சில நேரங்களில் சில முக்கியமான போட்டிகளில் வானிலை மற்றும் பிட்ச் போன்ற அம்சங்களில் வெற்றியை தீர்மானிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டாஸ் தான் இந்தியாவிற்கு இந்த உலக கோப்பையில் பாதகமாக அமைந்து தோல்வியை பரிசளித்தது.
- ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டியில் ஏதேனும் ஒன்றில் டாஸ் இந்தியாவின் பக்கம் விழுந்திருந்தால் கண்டிப்பாக வெற்றியும் இந்தியாவின் பக்கம் வந்திருக்கும் அதன் காரணமாக இந்தியாவும் அரையிறுதிக்கு சென்றிருக்கும் என உங்களுக்கே தெரியும்.
ஆனால் அதே டாஸ் எனும் அதிர்ஷ்டம் காலம் கடந்த பின்னர் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியாவின் பக்கம் வந்தும் பயனில்லாமல் போனது.
விராட் கோலியும் டாஸ் அதிர்ஷ்டமும்:
கடந்த 2014 முதல் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலிக்கு இதுவரை டாஸ் எனும் அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு கை கொடுத்துள்ளது என்பது பற்றி பார்ப்போம்:
சர்வதேச டி20 : டாஸ் வெற்றி - 20, டாஸ் தோல்வி - 30.
டி20 உலககோப்பை : டாஸ் வெற்றி -2, டாஸ் தோல்வி - 3.
ஒருநாள் கிரிக்கெட் : டாஸ் வெற்றி - 40, டாஸ் தோல்வி - 54.
50 ஓவர் உலககோப்பை + சாம்பியன்ஸ் ட்ராபி : டாஸ் வெற்றி - 7, டாஸ் தோல்வி - 7.
டெஸ்ட் கிரிக்கெட் : டாஸ் வெற்றி - 28, டாஸ் - தோல்வி - 37.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் வெற்றி - 6, டாஸ் தோல்வி - 13.
இதிலிருந்தே விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு கைகொடுக்காமல் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கேப்டனாக இருப்பவர் வெற்றிக்கு எந்தெந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருப்பார் சில சமயங்களில் டாஸ் வெல்ல முடியாமல் போனால் அந்த திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு வெற்றி கைமீறிப் போய் விடுவோம் கூடிய சூழ்நிலை ஏற்படும். அது போன்ற பல நிலைமைகளில் தான் விராட் கோலி டாசில் தோற்று வெற்றி பெற முடியாத கேப்டனாக உள்ளார்.