IPL Mega Auction 2022: தக்கவைக்கும் ஏல தேதி அறிவிப்பு, CSK உள்ளிட்ட 5 முக்கிய அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் இதோ

ஐபிஎல் 2022 தொடரில் புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரானது 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மெகா தொடராக நடைபெற உள்ளது.

Photo Credits : BCCI/IPL


மெகா ஏலம்:

முன்னதாக புதியதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்காக சிறிய அளவில் அல்லாமல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது, இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை முதலில் தேர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போன்ற என விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

தக்கவைக்கும் வீரர்கள் தேதி:

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்க உள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்புகள் வரும் நவம்பர் 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.

  • இந்த நிகழ்ச்சியானது நவம்பர் 30-ஆம் தேதி அன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பில் நேரடியாக ஒளிபரப்ப படவுள்ளது.

தக்கவைக்கும் வீரர்கள்:

இந்த நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக சென்னை உள்ளிட்ட முக்கியமான 4 அணிகள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன்படி,

சென்னை சூப்பர் கிங்ஸ்:

நடப்பு சாம்பியன் மற்றும் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2022 தொடரில் 4 வீரர்களை தக்க வைக்க உள்ளது.

எம்எஸ் தோனி: மெகா ஏலத்தில் டோனி தான் முதல் வீரராக தக்க வைக்கப்படுவார் என அந்த அணியின் நிர்வாக இயக்குனர் ஏற்கனவே அறிவித்துள்ளார், அதன்படி சென்னை தக்கவைக்கும் முதல் வீரர் அந்த அணியின் கேப்டன் மற்றும் இதயமான எம்எஸ் தோனி ஆவார்.

  • இவரை அடுத்த 3 சீசனுக்கு சென்னை நிர்வாகம் தக்க வைக்க உள்ளதாக தெரிகிறது.

ரவீந்திர ஜடேஜா : இந்திய அணியில் தற்போது நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராகவும் மின்னல் வேக பீல்டராகவும் இருக்கும் ரவீந்திர ஜடேஜா சென்னை நிர்வாகம் தக்கவைக்கும் 2வது வீரர் ஆவார்.

ருதுராஜ் கைக்வாட்: ஐபிஎல் 2021 தொடரில் ஆரஞ்சு கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது முறையாக கோப்பையை வெல்ல வித்திட்ட இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கைக்வாட் சென்னை நிர்வாகம் தக்கவைக்கும் 3-வது வீரராக இருப்பார்.

  • ஏற்கனவே அணியில் வயதான வீரர்கள் இருப்பதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை நிர்வாகம் 100% இவரை தக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மொய்ன் அலி அல்லது சம் கரன்: 4 வீரர்களில் 3 பேர் இந்தியராக இருப்பதால் 1 வெளிநாட்டு வீரரை மட்டுமே சென்னை அணியால் தக்கவைக்க முடியும். எனவே சமீபத்திய ஐபிஎல் தொடரில் கலக்கிய ஆல் ரவுண்டர் மொய்ன் அலி அல்லது சாம் கரன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை சென்னை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சுரேஷ் ரெய்னா : சின்ன தல எங்கப்பா எனக் கேட்கும் ரசிகர்களுக்கு கடந்த சில வருடங்களாகவே அவர் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார், ஐபிஎல் 2021 தொடரில் கூட முக்கியமான பிளே ஆப் சுற்றில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

  • எனவே 2022 தொடருக்கான ஏலத்தில் சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப் படமாட்டார் என நம்மப்படுகிறது, ஒருவேளை மெகா ஏலத்தின் போது அவரை சென்னை நிர்வாகம் வாங்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் : 

5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள் இதோ:

ரோகித் சர்மா இல்லாத மும்பையா என்பதுபோல் மும்பை அணி தக்க வைக்க போகும் முதல் வீரர் ரோகித் சர்மா ஆவார்.

இவருடன் இந்தியாவின் நம்பர் ஒன் பவுலராக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ரா வருங்காலத்தை கணக்கில் வைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் இளம் வீரர் இஷாந்த் கிசான் ஆகியோரையும் மும்பை தக்கவைக்க உள்ளது.

  • வெளிநாட்டவர் பட்டியலில் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்காக பங்காற்றி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிரண் பொல்லார்ட் தக்கவைக்க வைக்கப்பட உள்ளார்.

டெல்லி கேபிட்டல்ஸ்:

ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, அக்சர் படேல் ஆகிய 3 இளம் இந்திய வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என தெரிய வருகிறது.

வெளிநாட்டு வீரர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகங்களான அன்றிச் நோர்ட்ஜே அல்லது காகிசோ ரபாடா ஆகியோரில் யாரேனும் ஒருவர் தங்க வைக்கப்படுவர் என எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

கொல்கத்தா அணியில் இந்திய வீரர்கள் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் சக்கரவர்த்தி, சுப்மன் கில் அல்லது ஐபிஎல் 2021 தொடரில் ஆல்-ரவுண்டராக கலக்கிய வெங்கடேச ஐயர் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் அல்லது சுனில் நரைன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் தங்க வைக்கப்படுவார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

சமீபத்தில் பெங்களூரு அணியின் முக்கிய வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், எனவே பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகிய இருவரை மட்டும் தக்க வைக்க உள்ளது.

இது மட்டுமல்லாமல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் நட்சத்திரங்களான டேவிட் வார்னர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தங்கள் அணிக்கு முதல் வீரராகத் தேர்வு செய்து கேப்டன்சிப் பொறுப்பையும் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Post Next Post

Your Reaction