மனுஷனாடா நீங்கல்லாம் ! இந்திய வீரர்களை வாட்டி வதைக்கும் பிசிசிஐ, பரிசாக டி20 உலககோப்பை தோல்வி

துபாயில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அரையிறுதிக்கு செல்ல முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Photo : Getty Images


முன்னதாக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களம் இறங்கியது, பரபரப்பான அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்தியா உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்று பரிதாபத்துக்கு உள்ளானது.

பரிதாப தோல்வி:

பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முக்கிய போட்டியிலும் தோற்ற இந்திய அணி பின்னர் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்ற போதிலும் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகக் கருதப்பட்ட இந்தியா இறுதியில் கடந்த 2012 டி20 உலகக் கோப்பைக்கு பின் முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது.

ஐபிஎல் பரிதாபம் :

இந்த உலக கோப்பையில் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் என்பதையும் தாண்டி இந்தியாவின் தோல்விக்கு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது, ஏனெனில் ஐபிஎல் முடிந்த அடுத்த வாரமே டி20 உலகக்கோப்பை தொடங்கியதால் அதற்கு தயாராவதற்கு இந்திய வீரர்களுக்கு போதுமான கால இடைவெளி கிடைக்கவில்லை.

இது பற்றி இந்தியாவின் ஜாம்பவான் முன்னாள் வீரர் கபில்தேவ் வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருந்தார். அது பற்றி படிக்க👇

T20 World Cup 2021 : இனியாவது IPL க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க - கபில் தேவ்

வாட்டி வதைக்கும் பிசிசிஐ :

நீண்ட நாட்களாக தொடர்ந்து கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து கிரிக்கெட் விளையாடி வருவது மனதளவில் மிகப்பெரிய சோர்வை கொடுத்துள்ளதாக நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி முடிந்த பின்னர் ஜஸ்பிரித் பும்ரா இந்த விஷயத்தை பற்றி வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

பும்ரா கூறியது போல உண்மையாகவே இந்திய வீரர்கள் நீண்ட நாட்களாக கட்டுப்பாட்டு வளையத்திற்குள் உள்ளார்களா என்பதை பற்றி பார்ப்போம்:

1. பார்டர் - கவாஸ்கர் கோப்பை :

கடந்த 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்றது, அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்த போதிலும் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் 2 - 1 என தொடரை வென்று சாதனை படைத்தது.

2. இங்கிலாந்து தொடர் 2021:

கடந்த ஜனவரி 2021 வரை நீடித்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இந்திய வீரர்கள் அடுத்த 10 - 20 நாட்கள் இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றனர்.

3. ஐபிஎல் 2021:

மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அடுத்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் களம் இறங்கினார்கள்.

4. டெஸ்ட் சாம்பியன்ஷிப் & இங்கிலாந்து தொடர் :

ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி முழுமையாக நடைபெறாத காரணத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதை அடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க அப்படியே இந்திய அணியினர் இங்கிலாந்து புறப்பட்டனர்.

அந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்ற போதிலும் பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

5. ஐபிஎல் 2021 :

அந்த தொடரில் 4 போட்டிகள் மட்டும் நடந்து முடிந்த நிலையில் 5வது போட்டி ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் இந்திய வீரர்கள் ஒரு வார கால இடைவெளிக்குள் எஞ்சிய ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றனர்.

6. டி20 உலககோப்பை :

அக்டோபர் 15 ஆம் தேதி ஐபிஎல் 2021 தொடர் முடிந்த அடுத்த 2 நாட்களிலேயே அக்டோபர் 17ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கியது, இதில் இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தானுடன் விளையாடியது.

இதிலிருந்தே கிட்டத்தட்ட ஒரு வருடமாக பெரும்பாலான முக்கிய இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் தொடர்ந்து விளையாடுவதும் அவர்களை பிசிசிஐ வாட்டி வதைப்பதும் தெரியவருகிறது.

தோல்வி பரிசு :

இந்த கட்டுப்பாட்டு வளையத்திற்குள் என்னதான் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தை பிசிசிஐ அனுமதித்தாலும் வீரர்களால் அவர்களின் குடும்பமும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் உட்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது, மேலும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் குடும்பத்துடன் இருந்தாலும் கூட வெளியில் சுதந்திரமாக சென்று நேரத்தை செலவிடுவதால் கிடைக்கும் புத்துணர்ச்சி இந்திய வீரர்களுக்கு கிடைக்காது என்பதை பிசிசிஐ உணர வேண்டும்.

இப்படி தொடர்ந்து இந்திய வீரர்களை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் பிசிசிஐ உட்படுத்தி வந்த காரணத்தால் டி20 உலக கோப்பையில் தோல்வியே பரிசாக கிடைத்தது, இந்த தோல்வியில் கிடைத்த பாடத்தை உணர்ந்து இனியாவது வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டின் கால அட்டவணையை பிசிசிஐ சரிவர அமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction