ஐசிசி டி20 உலககோப்பை 2021 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாத விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளது, மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பையை வெல்ல முடியாததால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
Photo : Getty Images |
நியூஸிலாந்து சுற்றுப்பயணம்:
இதையடுத்து இந்திய அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் முதவதாக வரும் நவம்பர் 17 அன்று துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
- அதில் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலிக்கு பதில் புதிய கேப்டனாக ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார், புதிய துணை கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளமைக்கு வாயப்பு:
அதே சமயம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி ஆரஞ்சு தொப்பியை வென்ற ருத்ராஜ் கைக்வாட், ஊதா தொப்பியை வென்ற ஹர்சல் படேல், ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் உலக கோப்பையில் இடம் பிடிக்காத சஹால், சஹர், அக்சார் படேல் போன்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இதோ :
Photo Credits : BCCI |
டெஸ்ட் தொடர் :
இந்த நிலையில் டி20 தொடருக்கு பின் வரும் நவம்பர் 25 ஆம் தேதி துவங்க இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கபட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் மனதளவில் சோர்ந்துள்ள இந்திய வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் கான்பூரில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்து விட்டு மும்பை வான்கடேவில் நடைபெறும் 2வது போட்டிக்கு திரும்ப உள்ளார், எனவே முதல் போட்டியில் அஜிங்கிய ரஹானே கேப்டன் செய்ய உள்ளார்.
- அதே சமயம் ரோகித் சர்மா இந்த தொடர் முழுவதும் ஓய்வை எடுக்க உள்ளார். இவருடன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, ரிஷப் பண்ட், ஷார்துல் தாகூர் அகியோரும் நியூசிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த அணியில் கேஎஸ் பரத், ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந் யாதவ், பிரசித் கிருஷ்னா ஆகியோருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தால் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - சுப்மன் கில் ஜோடி ஒபெனிங்கில் களமிறங்க உள்ளனர், அத்துடன் விக்கெட் கீப்பராக அனுபவம் மிகுந்த வ்ரிதிமான் சஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
செடேஸ்வர் புஜாரா, அஷ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர் ஆனால் அனுபவ வீரர் ஹனுமா விஹாரி கழட்டிவிட பட்டுள்ளார்.
நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதோ:
ரஹானே (கேப்டன்), கேஎல் ராகுல், மயங் அகர்வால், செடேஸ்வர் புஜாரா (துணை கேப்டன்), கில், ஷரீயஸ் ஐயர், வ்ரிதிமான் சஹா (கீப்பர்), கேஎஸ் பரத் (கீப்பர்),ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜெயந் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா