ஐசிசி அண்டர் 19 உலககோப்பை வரும் 2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது, 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக கோப்பை 14வது முறையாக வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் நடைபெற உள்ளது.
Photo Credits : Getty Images |
போட்டி மைதானங்கள் :
வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த உலக கோப்பையில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், இந்தியா உட்பட உலகின் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்று நாக் அவுட் சுற்று உட்பட 48 போட்டிகள் வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் உள்ள ஆண்டிகுவா & பார்புடா, கயானா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், டிரினிடாட் & டபாகோ ஆகிய 4 முக்கிய நகரங்களில் உள்ள 10 மைதானங்களில் நடைபெற உள்ளன.
- இந்த உலகக் கோப்பையின் லீக் போட்டிகள் கயானா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், டிரினிடாட் & டபாகோ ஆகிய நகரங்களில் ஜனவரி 14 முதல் 22 வரை நடைபெற உள்ளன.
முதல் போட்டி:
லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜனவரி 14-ஆம் தேதி போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, அதே நாளில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை எதிர் கொள்வதால் முதல் நாளில் 2 போட்டிகளுடன் இந்த உலக கோப்பை துவங்க உள்ளது.
பார்மட் :
இந்த உலக கோப்பையில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான பிளேட் மற்றும் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும், இந்த பிளேட் மற்றும் சூப்பர் லீக் சுற்றில் வெற்றி பெறும் 4 அணிகள் அதற்கு அடுத்த சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன.
- இந்த உலக கோப்பையில் முதல் முறையாக களமிறங்கும் உகாண்டா அணி இந்தியா இடம் பெற்றிருக்கும் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
அரை இறுதி & பைனல்:
இந்த உலககோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 1ஆம் தேதியும் 2வது அரையிறுதிப் போட்டி கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
- இதில் வெற்றி பெறும் அணிகள் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தும் மாபெரும் இறுதி போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி எடுக்கும் எண்ணம் ஜனவரி 9 முதல் 12ம் தேதி வரை 16 பயிற்சி போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கும் 16 அணிகளும் அதன் பிரிவுகளும் இதோ :
குரூப் ஏ : வங்கதேசம், இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு நாடுகள்.
குரூப் பி : இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா.
குரூப் சி : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே.
குரூப் டி : வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, ஸ்காட்லாந்து.
இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் அட்டவணை இதோ :
- இந்தியா V தென்ஆப்பிரிக்கா,ஜனவரி 15, கயானா.
- இந்தியா V அயர்லாந்து, ஜனவரி 19, டிரினிடாட் & டபாகோ.
- இந்தியா V உகாண்டா, ஜனவரி 22, டிரினிடாட் & டபாகோ.
ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022, முழு அட்டவணை இதோ:
Photo Credits : ICC |
வெளியேறிய நியூஸிலாந்து :
சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள கடுமையான குவாரன்டைன் விதிமுறைகள் காரணமாக இந்த உலகக் கோப்பை முடிந்த பின்னர் அந்நாட்டு வீரர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த உலக கோப்பையில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது, இதன் காரணமாக அந்த அணிக்கு பதில் ஸ்காட்லாந்து அணி குரூப் டி பிரிவில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.