கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் டாப் இந்திய பேட்டிங் வீரர்கள் தடுமாறிய வேளையில் ஹர்டிக் பாண்டியா மட்டும் தனி ஒருவனாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தார்.
Hardik Pandya | Kapip Dev |
அதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார், இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே கலக்கியதால் பல வருடங்கள் கழித்து இந்தியாவிற்காக ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்து விட்டார் என இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய காயம்:
அந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பைக்கு பின் காயமடைந்த அவர் சில மாதங்களாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார், பின் 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பிய போதிலும் பந்து வீசாமல் பேட்டிங் மட்டும் செய்து வந்தார்.
இருப்பினும் அவர் மீது இருந்த பெரிய நம்பிக்கையால் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் அவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார், குறிப்பாக டி20 உலக கோப்பையில் பாண்டியா நிச்சயம் பந்து வீசுவார் என வெளிப்படையாகவே தேர்வு குழுவினர் அவரின் தேர்வு பற்றி தெரிவித்திருந்தனர்.
ஏமாற்றிய பாண்டியா:
ஆனால் ஐபிஎல் தொடரில் பந்து வீசாத பாண்டியா பின்னர் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முக்கிய போட்டியில் ஒரு ஓவர் கூட வீசவில்லை, அந்தப் போட்டி மட்டுமல்லாது இந்தியா பரிதமாக தோல்வி அடைந்து வெளியேறிய இந்த உலகக் கோப்பை முழுவதும் அவர் வெறும் ஒரு சில ஓவர்களை மட்டுமே அவர் வீசினார்.
- பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்க தவறிய காரணத்தினால் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கபில் தேவ் கேள்வி:
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கோல்ஃப் நிகழ்ச்சியின் போது இந்திய அணியில் இடம்பிடிக்க தவறிய ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்தியாவின் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் கபில் தேவ் பதிலளிக்கையில்,
அவரை ஆல்-ரவுண்டராக கணக்கில் எடுத்துக்கொள்ள பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். சமீபகாலங்களாக அவர் பந்து வீசுவதை இல்லை பின்னர் எப்படி அவரை ஆல்ரவுண்டர் என அழைப்பது? காயத்திலிருந்து குணமடைந்தது அவரை முதலில் பந்து வீச சொல்லுங்கள். நமது நாட்டுக்கு அவர் தேவையான ஒரு முக்கியமான பேட்டர் ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை அவர் இன்னும் நிறைய போட்டிகளில் பந்துவீச வேண்டும், அவர் முதலில் பந்து வீசட்டும் பின்னர் அவரை ஆல்ரவுண்டர் என அழைக்கலாம்.
என கூறிய அவர் தற்போதைய நிலைமையில் எதன் அடிப்படையில் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பது என கேள்வி எழுப்பினார்.
கேள்விக்குறி:
தற்போதைய நிலையில் ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று இந்தியாவிற்காக விளையாடுவதற்கு தேவையான வேலைகளில் ஈடுபடாமல் தனது மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட வேளையில் உலக கோப்பையில் இந்தியாவிற்காக கை கொடுக்க தவறிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்து வளர்ப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் தயாராகிவிட்டது, இதன் விளைவாக கடந்த வாரம் நடைபெற்ற முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்காக அசத்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு ஏற்கனவே பிசிசிஐ வாய்ப்பை வழங்கி விட்டது.
இது மட்டுமல்லாமல் வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு 100% வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது, இதனால் இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.