வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது, இதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த டிம் பைன் பாலியல் புகாரில் கடந்த வாரம் சிக்கினார்.
Photo Credits : Getty Images |
ராஜினாமா:
கடந்த 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட அந்த வருடத்தில் தனது சக பெண் நண்பர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், இதனால் வெடித்த சர்ச்சை காரணமாக அவரிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டது.
குற்றசாட்டுக்கு உள்ளான காரணத்தால் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டிம் பைன் கடந்த வாரம் தினங்களுக்கு முன்பாக அறிவித்தார், அத்துடன் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக மன நலத்தை காக்கும் வகையில் விலகுவதாக அவர் அறிவித்தார்.
பட் கமின்ஸ் கேப்டன்:
இதை அடுத்து ஆஸ்திரேலியாவின் 47வது டெஸ்ட் கேப்டனாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் "பட் கமின்ஸ்" நியமனம் செய்து நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது, அத்துடன் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.
சர்ச்சையில் ஸ்மித்:
கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையின் போது அதற்கு காரணமாக இருந்த அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக தடை செய்தது அனைவருக்கும் தெரியும்.
- இதில் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை மற்றும் 2 வருடம் கேப்டன்ஷிப் செய்ய தடை விதிக்கப்பட்டது, அதைப்போல் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னருக்கு 1 வருடம் தடை மற்றும் வாழ்நாள் முழுவதும் கேப்டன்ஷிப் செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆஸி ஜாம்பவான்கள் விமர்சனம்:
அந்த தடைகளில் இருந்து மீண்டு வந்த ஸ்டீவ் ஸ்மித் 2020 முதல் ஆஸ்திரேலியா மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சாதாரண வீரராக மட்டும் விளையாடி வருகிறார், இந்த வேளையில் சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் இயன் சேப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் நேற்று அளித்த பேட்டி ஒன்றில்,
ஒருவேளை ஆஸ்திரேலியாவின் கேப்டனாக நான் தவறு செய்திருந்தால் ஆஸ்திரேலிய நிர்வாகம் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் என்னை எப்போதும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டார்கள், சீட்டிங் என்பது பெரிய அளவில் இருந்தாலும் சிறிய அளவில் இருந்தாலும் எனது புத்தகத்தில் அது சீட்டிங் தான்.
என ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது தவறு என கடுமையாக விமர்சித்தார்.
ஷேன் வார்னே:
இதேபோல் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி உலகின் தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே ஹெரால்ட் சன் பத்திரிகையில் பேசுகையில்,
நாம் அனைவருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை மிகவும் பிடிக்கும், அவர் உலகின் தலைசிறந்த பெஸ்ட் பேட்ஸ்மேனாக இருப்பது மிகப்பெரிய பெருமையாகும் ஆனால் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனாக அவர் இருக்கக் கூடாது. நாம் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள் தான், பந்தை சேதப்படுத்திய விஷயத்திலிருந்து நாம் கடந்து வந்துவிட்டோம் ஆனால் அது அவரின் தலைமையில் நடைபெற்றது, அந்த சமயத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கடினமானது என நான் கூறினேன்.
இருப்பினும் அவரை துணைக் கேப்டனாக மீண்டும் 2வது முறையாக வாய்ப்பளித்ததற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் விமர்சனங்களை சந்திக்கும், இது நடத்தை நெறிமுறைகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கிப் போடுவது போன்றதாகும்.
என ஸ்டீவ் ஸ்டீவ் ஸ்மித்தை துணைக் கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது மிகவும் தவறானது என கூறினார், அத்துடன் "மார்னஸ் லபுஸ்சங்கே" போன்ற வேறு ஏதாவது திறமையான ஆஸ்திரேலிய வீரர்களை துணைக் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.