IPL 2022 Mega Auction : மெகா ஏலத்தில் போட்டிபோட போகும் 4 வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெற உள்ளது என்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுளளது, முன்னதாக ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் ஆமதாபாத் ஆகிய 2 புதிய நகரங்களை மையமாகக் கொண்டு 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Photo : BCCI/IPL


இதன் காரணமாக 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் நடைபெற உள்ளது, இந்த 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்ட தான் காரணமாக அந்த அணிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் வண்ணம் மெகா ஏலமும் நடைபெற உள்ளது.

4 வெளிநாட்டு வீரர்கள்:

அந்த வகையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 10 அணிகளும் போட்டி கூட இருக்கும் 4 முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1. டேவிட் வார்னர் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் எந்தவித காரணமுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கழற்றி விடப்பட்டார், முதலில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் பின்னர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்தும் நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • ஹைதெராபாத் அணிக்காக மலைபோல ரன்கள், 3 ஆரஞ்சு தொப்பிகள் மற்றும் கேப்டனாக 1 ஐபிஎல் சாம்பியன் பட்டம் என பல கனவுகளை நிஜமாக்கிய அவரை கழட்டி விட்ட காரணத்தால் வேதனையில் ஆழ்ந்த டேவிட் வார்னர் ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாட போவதில்லை எனவும் புதிய அணிக்காக விளையாட உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அத்துடன் சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரின் இறுதி போட்டியில் 53 ரன்கள் உட்பட 289 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்று முதல் முறையாக ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை வெல்ல உதவினார்

இதன் காரணமாக தன்னை கழற்றி விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல் ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னர் தனது மவுசையும் கூட்டியுள்ளார். அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு கேப்டன் தேவைப்படுவதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிக்கு அதிரடியான தொடக்க வீரர் மற்றும் வருங்கால கேப்டனும் தேவைப்படுவதால் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் டேவிட் வார்னரை விலைக்கு வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் போதும் என்பதில் சந்தேகமில்லை.

2. மேத்தியூ வேட் : ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த சில வருடங்களாகவே விளையாடி வரும் போதிலும் மேத்யூ வேட் மீது இதுவரை எந்த ஐபிஎல் அணியின் பார்வையும் விழவில்லை ஆனால் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவர் களமிறங்கிய 3 போட்டிகளில் 74 ரன்களை 74.00 என்ற சராசரியில் குவித்துள்ளார். 

  • குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய அரையிறுதிப் போட்டியில் வெறும் 17 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 41* ரன்கள் அடித்து அபார பினிஷிங் செய்தார், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பது மட்டுமல்லாமல் பினிஷராகவும் செயல்படுவதால் வரும் ஐபிஎல் ஏலத்தில் இவரையும் ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கலாம்.

3. ட்வயன் பீட்ரஸ் : கடந்த 2010 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு அவ்வப்போது விளையாடி வரும் போதிலும் தொடர்ச்சியான இடத்தை பிடிக்க முடியாமல் அந்த அணியின் ட்வயன் பீட்ரஸ் தடுமாறி வந்தார், இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் வெறும் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுக்களை 7 என்ற மிகக் குறைவான எக்கனாமிக் விகிதத்தில் வீழ்த்தி அசத்தினார்.

ஒரு பவுலிங் ஆல்-ரவுண்டராக இருக்கும் இவர் 160 என்ற அதிரடியான ஸ்டிரைக் விகிதத்தில் ரன்களை குவிக்க கூடிய வல்லமையும் பெற்றுள்ளார், எனவே இவரையும் வரும் ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் எடுக்க போட்டி போடலாம்.

4. சரித் அசலங்கா : இலங்கை அணிக்காக நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீரர் சரித் அசலங்கா 231 ரன்களை 46.40 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் ரன்கள் குவித்து அசத்தினார், ஒரு கட்டத்தில் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இவர் தான் முதலிடத்தில் இருந்தார்.

சமீபத்தில் இலங்கை வீரர்களான வணிந்து ஹசரங்கா, சமீரா போன்றவர்களை எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டின, அந்த வகையில் வரும் ஏலத்தில் இவரையும் ஐபிஎல் அணிகள் ஏலத்தில் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தால் ஆச்சரியப்படவில்லை.

Previous Post Next Post

Your Reaction