ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன, இதையடுத்து அடுத்த சீசனில் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் கோலாகலமாக நடைபெற உள்ளது.
Photo : BCCI/IPL |
மெகா ஏலம்:
புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் தற்போது இருக்கும் 8 அணிகளில் இருக்கும் வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு ஐபிஎல் 2022 தொடருக்காக மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் மற்றும் புதிய அணிகள் எத்தனை வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பது போன்ற முக்கியமான விதிமுறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகின.
அதை பற்றிய முழு விவரம்👇
IPL 2022 : மெகா ஏலத்தில் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் அறிவிப்பு
தக்கவைக்கும் வீரர்களுக்கான சம்பளம்:
இந்த இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்களுக்கு வழங்கவேண்டிய அதிகபட்ச சம்பளத் தொகை பற்றிய விதிமுறைகள் இன்று வெளியாகியுள்ளது.
8 அணிகள்: முதலில் ஏற்கனவே இருக்கும் சென்னை, மும்பை போன்ற 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
1. ஒவ்வொரு அணிக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் செலவிட வேண்டிய அதிகபட்சத் தொகை 90 கோடிகளாகும், ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இந்த 90 கோடிகளில் இருந்து கழிக்கப்படும்.
2. அந்த வகையில் ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்தால் அதில் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு அதிகபட்சமாக 16 கோடிகளும் 2வதாக தக்கவைக்கும் வீரருக்கு 12 கோடிகளும்3வதாக தக்கவைக்கும் வீரருக்கு 8 கோடிகளும் 4வதாக தக்கவைக்கும் வீரருக்கு 6 கோடிகளும் அதிகபட்சமாக சம்பளத் தொகையாக வழங்கலாம்.
- இந்த 90 கோடிகளில் 42 கோடிகள் கழிந்து விடும் என்பதால் மீதம் இருக்கும் 48 கோடிகளை மட்டுமே ஏலத்தின்போது அந்த அணி பயன்படுத்த முடியும்.
3. ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் அதில் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு 15 கொடிகளும் 2வதாக தக்க வைக்கும் வீரருக்கு 11 கோடிகளும் 3வதாக தக்கவைக்கும் வீரருக்கு 7 கோடிகளும் அதிகபட்சமாக வழங்கலாம்.
- இந்த முறையில் 33 கோடிகள் வழங்கிய பின் மீதம் இருக்கும் 57 கோடிகளை அந்த அணி ஏலத்தின் போது உபயோகப்படுத்தலாம்.
4. அதேபோல் ஒரு அணி 2 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டால் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு 14 கோடிகளும் இரண்டாவதாக தக்கவைக்கும் வீரருக்கு 10 கோடிகளும் வழங்கலாம்.
- இந்த வகையில் 24 கோடிகள் போக மீத தொகையான 66 கோடிகளை ஏலத்தில் பயன்படுத்தலாம்.
5. ஒரு அணி 1 வீரரை மட்டும் தக்க வைத்துக் கொண்டால் அவருக்கு அதிகபட்சமாக 14 கோடிகளை வழங்கலாம், மீதி இருக்கும் 86 கோடி ரூபாய்களை ஏலத்தின் போது பயன்படுத்தலாம்.
- இதே சமயம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வீரருக்கு ஒரு அணி அதிகபட்சமாக 4 கோடிகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
புதிய அணிகள் :
புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக தேர்வு செய்து கொள்ள முடியும்.
1. இந்த 2 அணிகளும் ஏலத்திற்காக அதிகபட்சமாக 90 கோடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம், அந்த அணிகள் தேர்வு செய்யும் வீரர்களுக்கு வழங்கும் சம்பளத் தொகை இந்த 90 கோடிகளில் இருந்து கழிக்கப்படும்.
2. இந்த அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தக்க வைக்கும் பட்சத்தில் முதலில் தேர்வு செய்யும் வீரருக்கு 15 கோடிகளும் இரண்டாவதாக தேர்வு செய்யும் வீரருக்கு 11 கோடிகளும் 3வதாக தேர்வு செய்யும் வீரருக்கு 7 கோடிகளும் வழங்கலாம்.
- இந்த முறையில் 33 கோடிகள் போக மீதமிருக்கும் 53 கோடிகளை ஏலத்தின் போது அந்த அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3. இந்த அணிகள் 2 வீரர்களை தேர்வு செய்தால் முதலில் தேர்வு செய்யும் வீரருக்கு 14 கோடிகளும் இரண்டாவதாக தேர்வு செய்யும் வீரருக்கு 10 கோடிகளும் அதிகபட்சமாக வழங்கலாம்.
- மீதம் உள்ள 66 கோடிகளை ஏலத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. ஒரு வீரரை மட்டும் தேர்வு செய்தால் அவருக்கு அதிகபட்சமாக 14 கோடிகளை வழங்கலாம், மீதம் இருக்கும் 76 கோடிகளை ஏலத்தில் உபயோகப்படுத்தலாம்.
- அதேபோல் இந்த 2 அணிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வீரரை தேர்வு செய்தால் அவருக்கு அதிகபட்சமாக 4 கோடிகளை மட்டுமே வழங்க வேண்டும்.
இந்த விதிமுறைகளின்படி ஏலத்தில் பங்கெடுக்கும் 10 அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு எவ்வளவு சம்பளமாக வழங்கி உள்ளார்கள் என்பது போன்ற முழு விவரங்களையும் ஐபிஎல் நிர்வாகக் கமிட்டி அளிக்க வேண்டும், அதன்பிறகு ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறும் தேதி வெளியாக உள்ளது.