ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இடம் பிடித்துள்ளது, இதையடுத்து இந்த உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் இதே பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது.
Rohit Sharma (Photo : Getty Images) |
இந்தியா - பாகிஸ்தான்:
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அதில் விருப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. எல்லைப் பிரச்சனைகள் காரணமாக இவ்விரு அணிகள் நேருக்கு நேர் கிரிக்கெட் தொடர்களில் கடந்த பல வருடங்கள் மோதாமல் இருப்பதாலும் உலக கோப்பை தொடர்களில் மட்டும் மோதி வருவதாலும் இவ்விரு அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பை விட சமீப காலங்களில் உலக அளவில் தனி மவுசு உள்ளது.
- ஆஷஸ் தொடரை போல ஒரு சாதரண கிரிக்கெட் போட்டி அதில் ஒரு வெற்றி என்று அனைத்தையும் தாண்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இரு நாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு மானப் பிரச்சனையாக கருத்தப்படுகிறது.
வெற்றிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் தங்களது முழு திறமையுடன் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் வேளையில் சமூக வலைதளங்களில் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மோதிக் கொள்வது இந்த போட்டிக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
போட்டி விவரம்:
இந்தியா V பாகிஸ்தான், போட்டி 16, சூப்பர் 12 சுற்று, ஐசிசி டி20 உலககோப்பை, இரவு 7.30 மணி, துபாய்.
நேரடி ஒளிபரப்பு :
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் ஆப்.
முன்னோட்டம்:
இந்தியா : விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் வலுவான அணியாக காணப்படுகிறது.
பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டருக்கு வலு சேர்க்கிறார்கள். டாப் ஆர்டர் சொதப்பினாலும் கூட அதை தாங்கி பிடிக்க கூடிய அளவிற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் மிடில் ஆர்டரில் உள்ளார்கள்.
பினிஷிங் செய்வதற்கு ஹர்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீசும் ஆல்-ரவுண்டர்களாக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா, ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இறுதி கட்ட ஓவர்களில் கூட ரன்களை கட்டுப்படுத்தி இந்தியாவிற்கு உதவுவார்கள் என நம்பலாம்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் மேற்கூறிய அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்து நல்ல பார்மில் உள்ளார்கள், எனவே வரலாற்றில் இதற்கு முன் டி20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை வீழ்த்தியது போல இந்த முறையும் வலுவான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் நம்பலாம்.
பாகிஸ்தான் :
நட்சத்திர வீரர் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் திறமையான வீரர்கள் உள்ளார்கள்.
பாபர் அசாம், பாகர் ஜமான், சடாப் கான், ஆசிப் அலி ஆகியோர் பேட்டிங்கில் முக்கிய வீரர்களாக இருக்க மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த சோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் பந்து வீசும் ஆல்ரவுண்டர்களாக அணிக்கு வலு சேர்க்கிறார்கள். முன்னாள் கேப்டன் ஷர்பிரஸ் அஹமது,இமாத் வாசிம் போன்ற முக்கிய வீரர்களும் அந்த அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.
வேகப்பந்து வீச்சில் ஷாஹின் அப்ரிடி, ஹசன் அலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள், இருப்பினும் அந்த அணி சுழல் பந்துவீச்சு இந்தியா அளவுக்கு இல்லை என்றே கூறலாம்.
Photo : Getty Images |
புள்ளிவிவரம்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரலாற்றில் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
- அதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்று வலுவான அணியாக முன்னிலை வகிக்கிறது, பாகிஸ்தான் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
குறிப்பாக ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்த 2 அணிகள் மோதிய 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்த உலகத்திற்கே தெரியும்.
பிட்ச் விவரங்கள்:
போட்டி நடைபெறும் துபாய் நகரில் போட்டியின் போது மழை பெறுவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை.
போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் கடந்த வாரம் தான் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்தது, எனவே அதே மாதிரியான பிட்ச் தான் இந்த ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பார்த்தால் ஐபிஎல் போட்டிகளில் சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களை விட துபாய் பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டுக்குமே சிறப்பாக கைகொடுத்தது, இருப்பினும் ஒரு சில போட்டிகளில் பேட்டிங் மிகவும் சவாலாக இருந்தது.
எனவே ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் பின் எளிதாக ரன்கள் குவிக்கலாம், திறமையை வெளிப்படுத்தும் பவுலர்களுக்கும் விக்கெட் கிடைக்காமல் இருக்காது.
- ஐபிஎல் 2021 தொடரில இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதலில் இன்னிங்ஸ் ஸ்கோர் 155 ஆகும்.
- மேலும் இங்கு இவ்வருடம் நடைபெற்ற 12 ஐபிஎல் போட்டிகளில் 9 முறை சேசிங் செய்த அணிகளும் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.
உத்தேச அணிகள்:
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் தாகூருக்கு பதில் அனுபவ புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படலாம். ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இடையே லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய உத்தேச அணி : ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர்/வருண் சக்ரவர்த்தி/ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஸ்வர் குமார், முஹம்மத் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.