T20 World Cup 2021: இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் - வாக்கார் யூனிஸ்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடர் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது, இந்த உலகக் கோப்பையில் ஆசிய கிரிக்கெட்டின் எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Waqaq Younis | Team India (Source : Twitter)


இருநாட்டு எல்லைப் பிரச்சனைகள் காரணமாக இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் தொடர்கள் கடந்த பல வருடங்களாக நின்று போய் உள்ளது, எனவே ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் மட்டும் இவ்விரு அணிகளும் வேறு வழியின்றி மோதி வருகின்றன.

இதன் காரணமாகவே இந்த 2 அணிகளும் போட்டிகளுக்கு உலக அளவில் மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்படுகிறது.

உலககோப்பை தாகம் :

உலக கோப்பை என்று வரும்போது இவ்விரு அணிகளை பொருத்தவரை பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது, ஏனெனில் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என இரண்டு வகையான உலக கோப்பைகளிலும் இந்தியாவை எவ்வளவோ போராடியும் பாகிஸ்தானால் ஒருமுறைகூட வீழ்த்த முடியவில்லை.

இதனாலேயே ஒவ்வொரு உலக கோப்பை துவங்கும் போதும் இந்த முறையாவது இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் களமிறங்குவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

வாக்கார் யூனிஸ்:

இந்நிலையில் வருகின்ற டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி, 

தனது முழு திறமையுடன் விளையாடும் பட்சத்தில் கண்டிப்பாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என நம்புகிறேன், அது மிகவும் எளிதல்ல ஆனால் அதற்கு யாரேனும் ஒருவர் சிறப்பாக விளையாடினாலே போதுமானது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையின் முதல் போட்டி என்பதால் இருவருக்குமே அழுத்தம் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஆரம்பகட்ட ஒருசில பந்துகளும் விக்கெட்டுகளும் இந்தப் போட்டியில் மிக முக்கியமானதாக இருக்கும், அதை தவிர்த்தால் கண்டிப்பாக எங்களால் இந்த போட்டியை வெல்ல முடியும்

என கிரிக்விக் இணையதளத்தில் தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த வாகார் யூனிஸ் 2021 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அணி தேர்வு பற்றி பயிற்சியாளராக தன்னுடன் விவாதிக்க காரணத்தால் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் ட்ராபி 2017:

ஒரு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர் என்பதால் தற்போதைய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் விட வலுவாக இருக்கும் பந்துவீச்சை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்த முடியும் என வக்கார் யூனிஸ் நம்புகிறார்.

பவுலிங் தான் எங்களின் வலுவாகும் அதை வைத்து எந்தவிதமான ஸ்கோரையும் டிபன்ட் செய்ய முடியும். 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் நாங்கள் அதை செய்தோம். எனவே அதே போன்றதொரு செயல்பாட்டை தற்போதைய அணியினர் வெளிப்படுத்த மாட்டார்கள் எனக் கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அணியில் இருக்கும் இதர பந்துவீச்சாளர்களை விட ஹசன் அலி தேர்ச்சியானவராக இருக்கிறார் என்பதால் பந்து வீச்சை கூட்டணியை அவர் தலைமை ஏற்க வேண்டும், உலக கோப்பை போன்ற மிகப் பெரிய போட்டியில் வெற்றி பெரும் அளவுக்கு அவரிடம் திறமையும் நுணுக்கங்களும் உள்ளது

என இது பற்றி மேலும் கூறிய வாகார் யூனிஸ் 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை மண்ணைக் கவ்வ செய்து கோப்பையை வென்றது போல் மீண்டும் டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்த முடியும் என நம்பிக்கை கூறினார்.

Previous Post Next Post

Your Reaction