சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2021: தமிழ்நாடு அணி அறிவிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை இந்த வருடம் துவங்க உள்ளது, வரும் நவம்பர் 4 முதல் கோலாகலமாக தொடங்கும் இந்தத் தொடர் நவம்பர் 22ஆம் தேதி வரை லக்னோவில் நடைபெற உள்ளது.

Syed Mustaq Ali Trophy 2021
TamilNadu Cricket Team (Photo : BCCI Domestic)


இந்த தொடரில் பங்கேற்கும் 38 அணிகளும் லீக் சுற்றி ரவுண்ட் ராபின் முறைப்படி மோதவுள்ளன, மேலும் இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் நாக்அவுட் சுற்று உட்பட மொத்தம் 149 போட்டிகள் நடைபெற உள்ளன.

நடப்பு சாம்பியன் தமிழ்நாடு:

இந்த தொடரில் கடைசியாக நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 2020/21 கோப்பையின் இறுதிப்போட்டியில் பரோட்டாவை வீழ்த்திய தமிழ்நாடு அணி கடந்த 2007 க்கு பின் 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது, இந்த வருடத்திற்கான சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி "எலைட் குரூப் ஏ" பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான 20 பேர் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணி நேற்று சென்னையில் அறிவிக்கப்பட்டது.

நடராஜன், வாஷங்டன் சுந்தர் சேர்ப்பு:

இந்த அணியில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி 20 2021 தொடரில் கலக்கிய இளம் வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சரவண குமார் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரில் காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து விலகிய சுழல் பந்துவீச்சாளர் வாஷங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் ஐபிஎல் தொடரில் பங்கு பெற முடியாத மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனும் அணியில் இணைக்க பட்டு உள்ளார்.

சிறப்பான அணி:

இவர்களுடன் பாபா அபராஜித், நாராயன் ஜெகதீசன் போன்ற அனுபவ வீரர்களும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஒரு சில போட்டிகளை பினிஷிங் செய்த அதிரடி இளம் வீரர் சாருகான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பந்துவீச்சில் சந்திப்பு வாரியர், முகமது, சாய் கிஷோர், கௌசிக், முருகன் அஸ்வின் போன்ற திறமையான வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார்கள், இந்த அணிக்கு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2021 டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளதால் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.

மொத்தத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக கிரிக்கெட் அணி சிறப்பான வீரர்களை கொண்ட அணியாக விளங்குகிறது.

சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021/22 தொடரில் பங்கேற்கும் தமிழக கிரிக்கெட் அணி இதோ:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்),வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், சந்தீப் வாரியர், சாய் கிஷோர், பாபா அபராஜித், நாராயண் ஜெகதீசன், முருகன் அஷ்வின்,ஷாரூக் கான், ஹரி நிஷாந்த், சித்தார்த், கங்கா ஸ்ரீதர் ராஜு, எம் முகமத், ஜே கௌசிக், சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், சாய் சுதர்ஷன், சரவண குமார்.

Previous Post Next Post

Your Reaction