நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
Eoin Morgan Heats Up with Ravichandran Ashwin (Source : Twitter) |
மோர்கன் - அஷ்வின் மோதல்:
அந்த போட்டியில் டெல்லி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் அந்த அணிக்காக விளையாடும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் ஆனார், அந்த சமயத்தில் எதிர்பாரா விதமாக அவரை அவுட் செய்த டிம் சவுத்தி மற்றும் கொல்கத்தாவின் கேப்டன் இயன் மோர்கன் ஆகியோருக்கும் அஸ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீடிரென ஏற்பட்ட இந்த மோதலால் போட்டியில் பரபரப்பு ஏற்படவே தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் தினேஷ் கார்த்திக் இடையில் புகுந்து இரு தரப்பையும் சமாதானம் செய்தார்.
அஷ்வின் பதிலடி :
பின்னர் கொல்கத்தா பேட்டிங் செய்யும்போது பேட் செய்ய உள்ளே வந்த இயன் மோர்கனை ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட்டாக்கி கடும் ஆக்ரோஷத்துடன் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பி பதிலடி கொடுத்தார், இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷேன் வார்னே விமர்சனம் :
அந்த வேளையில் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே மோர்கனை அவுட் செய்த பின் அஸ்வின் நடந்து கொண்ட விதம் மிகவும் இழிவானது என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எல்லையை மீறி நாம் எந்த விதத்திலும் நடந்து கொள்ளவில்லை எனவும் என்னுடைய போராட்ட குணத்தை தான் வெளிப்படுத்தினேன் என தனது டுவிட்டரில் தொடர்ச்சியாக 6 ட்வீட்களை போட்டு அஷ்வின் பதிலடி கொடுத்தார்.
இதே வேலையா போச்சு:
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இதேபோன்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு போட்டியில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் நினைவு கூர்ந்தார். இதுபற்றி கிரிக்பஸ் இணையதளத்தில்,
Photo By BCCI/IPL |
பஞ்சாப் அணிக்காக நான் விளையாடிய போது கிளென் மேக்ஸ்வெலை அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் இதே போல நடந்துகொண்டார், அந்த நிகழ்வு எனக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் அவர் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது அல்லது கிரிக்கெட்டுக்கு எதிரானது என நான் கூற விரும்பவில்லை, அந்த தருணத்தில் எம்எஸ் தோனி கூட அப்படி நடந்து கொண்டதற்காக அஸ்வின் மீது மிகவும் கோபப்பட்டு திட்டினார்.
என சேவாக் தெரிவித்தார். சேவாக் கூறும் அந்த நிகழ்வு கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய குவாலிபயர் 2 போட்டியாகும், அப்போது சென்னை அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மேக்ஸ்வெலை அவுட் செய்த பின் ஆக்ரோசமாக அவரை வழி அனுப்பிய விதத்தை சென்னை கேப்டன் எம்எஸ் தோனி கூட விரும்பவில்லை என சேவாக் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தவறு :
அந்த போட்டியில் எதன் காரணமாக போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது என்பது பற்றி இந்த பிரச்சனையை இடையில் புகுந்து சமாளித்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார் ஆனால் அது தவறானது என விரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் தான் இந்த விஷயத்தில் குற்றவாளி என கருதுகிறேன். அஸ்வினிடம் மோர்கன் அப்படி என்ன கூறினார் என்பது பற்றி அவர் வெளியே கூறாமல் இருந்திருந்தால் இந்த சலசலப்பு ஏற்பட்டிருக்காது. "பெரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை இவை அனைத்தும் விளையாட்டில் சகஜமானது" என தினேஷ் கார்த்திக் கூறியிருந்தால் இவ்வளவு சலசலப்பு வந்திருக்கவே வந்திருக்காது. யார் என்ன நினைக்கிறார் என்பது பற்றி கவலைப்பட என்ன தேவை வந்தது
என கூறிய சேவாக் எந்த ஒரு விளையாட்டிலும் களத்தில் நடக்கும் பரபரப்பான விஷயங்களைப் பற்றி வெளியே அதிகம் விவாதிக்க கூடாது எனவும் இந்த விஷயம் பற்றி சமூகவலைதளங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின பதிலளித்தது மிகவும் தவறான ஒன்று எனவும் தெரிவித்தார்.