ஐபிஎல் 2021 தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
MS Dhoni (Photo : BCCI/IPL) |
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சென்னையின் அற்புதமான பவுலிங்கில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிக பட்சமாக விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா 44 ரன்கள் எடுத்தார், சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளும், ட்வைன் பிராவோ 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
சென்னை வெற்றி:
பின் 135 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர்கள் ருத்ராஜ் 45 ரன்களும் டு பிளேஸிஸ் 41 ரன்களும் எடுத்து சிறப்பான அடித்தளமிட்டனர், அடுத்து வந்த மொயின் அலி 17 ரன்கள் எடுக்க இறுதியில் அம்பத்தி ராயுடு 17* ரன்களும் கேப்டன் தோனி 11* ரன்களும எடுத்து சிக்சர் அடித்து சென்னையை வெற்றி பெறச் செய்தார்.
பிளே ஆப் சுற்றில் சென்னை:
- இந்த வெற்றியின் வாயிலாக 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐபிஎல் 2021 தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் நிகழ்ந்த சில முக்கியமான சாதனைகளின் பட்டியல் இதோ:
1. இந்த போட்டியில் 45 ரன்கள் விளாசிய இளம் ருத்ராஜ் கைக்வாத் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை களமிறங்கிய 17 இன்னிங்ஸில் 611 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் வாயிலாக முதல் 17 ஐபிஎல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முதல் 17 ஐபிஎல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:
- ருதுராஜ் - 611 ரன்கள்.
- கெளதம் கம்பிர் - 565 ரன்கள்.
- ரோஹித் சர்மா - 530 ரன்கள்.
2. நேற்று 41 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளசிஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2500 ரன்களை குவித்த முதல் வெளிநாட்டு பேட்டர் என்ற சாதனை படைத்தார்.
- அத்துடன் சென்னை அணிக்காக 2500 ரன்களை அடிக்கும் 3வது வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி ஆகியோருக்குப் பின் பெற்றார்.
3. நேற்று முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த டு ப்ளேஸ்ஸிஸ் - ருதுராஜ் கைக்வாட் ஜோடி ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை மொத்தம் 599 ரன்கள் கொடுத்துள்ளார்கள்.
இதன் வாயிலாக இவ்ரகள் 2021 ஐபிஎல் தொடரில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது.
ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடிகள்:
- டு பிளேஸிஸ் - கைக்வாட் : 599 ரன்கள்.
- பிரிதிவி ஷா - ஷிகர் தவான் : 550 ரன்கள்.
4. அதேபோல் 6 50க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்களுடன் 2021 ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த ஓபனிங் ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர்.
5. சென்னை அணிக்காக ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையையும் டு பிளேஸிஸ் - ருதுராஜ் ஜோடி படைத்தது.
Ruturaj Gaikwad (Photo : BCCI/IPL) |
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த சென்னை ஜோடி:
- டு பிளேஸிஸ் - கைக்வாட் : 599* ரன்கள் (2021).
- மைக் ஹசி - சுரேஷ் ரெய்னா : 587 ரன்கள் (2013).
6. நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருது வென்ற சென்னையின் ஜோஸ் ஹேசல்வுட் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் (3/24).
7. ஹைதராபாத்துக்கு எதிரான இந்த போட்டியில் 3 கேட்ச்கள் பிடித்த எம்எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 100 கேட்ச்களை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.
- எம்எஸ் தோனி - 100 கேட்ச்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக.
8. அதேபோல் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னையை தோனி வெற்றி பெற செய்தார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆவது ஓவரில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற அபார சாதனையை எம்எஸ் தோனி படைத்தார்.
20 வது ஓவரில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட பேட்டர்கள்:
- எம்எஸ் தோனி - 50 சிக்ஸர்கள்.
- கிரண் பொல்லார்ட் - 30 சிக்சார்கள்.
9. நேற்று சென்னை வெற்றிகரமாக சேசிங் செய்த போட்டியில் கடைசி வரை அவுட் ஆகாமல் 11 ரன்கள் எடுத்திருந்த தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செய்து செய்ய போட்டிகளில் அதிக முறை அவுட் ஆகாமல் இருந்த பேட்டர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா உடன் (24 முறை) பகிர்ந்து கொண்டார்.
10. ஐபிஎல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
Chennai Super Kings (Photo : BCCI/IPL) |
11. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது இது 11வது முறையாகும், வரலாற்றில் அந்த அணிதான் அதிகபட்சமாக 12 முறை பங்கேற்ற ஐபிஎல் தொடரில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
12. நேற்றைய தோல்வியால் 2021 பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் அணியாக வெளியேறியது. கடந்த 2015க்கு பின் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்
13. சென்னைக்கு எதிராக 20 ஓவர்களில் 134/7 மட்டுமே எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிராக தனது மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
இதற்கு முன் கடந்த 2018இல் 139/7 ரன்கள் எடுத்திருந்ததே மிகக் குறைந்த ஸ்கோராக இருந்தது.