IPL 2021 : பஞ்சாப் அவமதித்ததாலேயே கிறிஸ் கெயில் விலகினார் - கெவின் பீட்டர்சன்

நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் 11 போட்டியில் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து நேற்று முன்தினம் விலகுவதாக அறிவித்தார்.

Chris Gayle | KL Rahul (Photo : BCCI/IPL)


  • வரும் அக்டோபரில் இதே துபாயில் துவங்க இருக்கும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் தனது நாடான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பங்கேற்க தம்மை புத்துணர்ச்சி படுத்த வேண்டும் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கெயில் தெரிவித்தார்.

வயதான கெயில் :

13,000+ ரன்களை அடித்து டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கராக பல சாதனைகளை கெயில் படைத்துள்ளார், இவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார்.

இருப்பினும் 42 வயது நெருங்கியுள்ள அவர் சமீபகாலமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிரடி சரவெடியாக விளையாடவில்லை என்றாலும் தம்மால் முடிந்தவரை விளையாடி வருகிறார், இதன் காரணமாக கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கமால் இருந்தது.

பிறந்தநாளில் வாய்ப்பு இல்லை:

குறிப்பாக அவரின் 42வது பிறந்தநாளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை, இதனால் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட ஜாம்பவான்களும் ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் பாதியிலேயே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கிறிஸ் கெயில் வெளியேறுவதற்கான மறைமுக காரணத்தை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். 

Photo By BCCI/IPL


இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

இந்த சூழ்நிலைகளில் அவர் சரியாக நடத்தப்படவில்லை. "அவர் தம்மை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறார்கள் மீண்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறார்கள்" என உணர்கிறார், குறிப்பாக அவரின் பிறந்த நாளில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு விருப்பம் இல்லை என்றால் 42 வயதான அவர் விருப்பப்படி நடக்கலாம்

என கெயிலை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் மரியாதையாக நடத்தவில்லை என மறைமுகமாக தெரிவித்தார்.

முழுக்க உண்மை :

கெவின் பீட்டர்சன் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்றே கூறலாம் ஏனெனில்

1. கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் பங்கேற்ற 13 ஐபிஎல் போட்டிகளில் 490 ரன்கள் விளாசி அசத்தினார்.

2. இருப்பினும் கூட எந்தவித காரணமுமின்றி 2020 ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் நிர்வாகம் அவரை கழட்டி விட்டது, அந்த 7 போட்டிகளில் பஞ்சாப் ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.

3. 2020இல் வாய்ப்பு கிடைத்த 7 போட்டிகளில் கெயில் 288 ரன்கள் குவித்து மீண்டும் அசத்தினார்.

4. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் என்றால் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடுபவர் என உலகிற்கே தெரியும்.

5. ஆனால் பஞ்சாப் அணியிலோ 2019 தவிர 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கிறிஸ் கெயிலை புறம் தள்ளிவிட்டு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியது.

6. இதன் காரணமாகவே இந்த வருடம் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்காத அவர் 10 போட்டிகளில் வெறும் 193 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மொத்தத்தில் 2020, 2021 என 2 வருடங்களிலுமே கிறிஸ் கெயிலை பஞ்சாப் அணி நிர்வாகம் சரியாக கையாள தவறிவிட்டது, அதனாலேயே அவர் பாதியில் விலகியுள்ளார் என தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

Previous Post Next Post

Your Reaction