பச்ச புள்ளைங்கள அடிச்சுட்டு பெருமை வேற - ஜடேஜா மீது சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

ஐபிஎல் 2021 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Ravindra Jadeja | Sanjay Manjrekar (Photo : BCCI/IPL)


அந்த அணிக்கு பல வீரர்கள் வெற்றிக்கு பங்காற்றி வரும் வேளையில் அதில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக்கிய வீரராக வலம் வருகிறார்.

22 ரன்கள் :

குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பான துவக்கத்திற்கு பின் இறுதிகட்டத்தில் சென்னை தடுமாறியது.

அந்த தருணத்தில் பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி உட்பட அடுத்தடுத்த 4 பவுண்டரிகளை விளாசி வெறும் 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

முன்னேறும் ஜடேஜா :

ஐபிஎல் மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே மட்டுமல்லாமல் இந்தியாவிற்காக 3 விதமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அற்புதமான ஆல்-ரவுண்டராக ஜொலித்து வருகிறார். தேவையான நேரத்தில் ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுப்பதுடன் மின்னல் வேகத்தில் பீல்டிங் என இந்திய அணியின் முதன்மையான வீரராக ரவீந்திர ஜடேஜா தன்னைத்தானே மெருகேற்றி வருகிறார்.

Chennai Super Kings (Photo : BCC/IPL)

இந்நிலையில் அடிப்பதெல்லாம் அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கு எதிராக மட்டுமே என ரவீந்திர ஜடேஜாவை இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் ஒருமுறை விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையதளத்தில்,

சிஎஸ்கே அணியில் அவருக்கு அளிக்கப் பட்டுள்ள பொறுப்புக்கு முன்னே ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் இன்னும் என்னை சமாதானப் படுத்தவில்லை, இதே பொறுப்பை தொடர்ந்து அவருக்கு அளிக்கும் பட்சத்தில் அவரால் தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதே போல் செயல்பட முடியுமா என தோன்றுகிறது ஏனெனில் இதுவரை அவர் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்சல் படேல் போன்ற சுமாரான பவுலர்களையே அடித்து வெளுத்து வாங்கியுள்ளார். தன்னை அட்டாக் செய்யும் வேகப்பந்து வீச்சாளரை ஜடேஜாவால் எதிர்க்க முடியுமா என்று பார்க்கவேண்டும்

என அடிப்பதெல்லாம் பச்சை பிள்ளைகளை இதுல பெருமை வேற என்பது போல் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஜடேஜாவை விமர்சித்துள்ளார்.

பினிஷெர் :

கடந்த சில வருடங்களாக சென்னை அணியின் பினிஷெராக இருந்து வரும் கேப்டன் தோனி பார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவரிடத்தில் இருந்து கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் புதிய பினிசராக தம்மால் முடிந்தவரை சிறப்பாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.

அந்த பொறுப்பில்தான் ரவீந்திர ஜடேஜாவால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியுமா என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி எழுப்புகிறார், ஜடேஜாவை அவர் விமர்சித்து வருவது தொடர்கதையாக இருப்பது இந்திய ரசிகர்களுக்கு தெரியும். 

அவரும் அந்த விமர்சனங்களுக்கு தம்மால் முடிந்த பதிலடியை தொடர்ந்து கொடுத்து வருகிறார் எடுத்துகாட்டாக ஐபிஎல் 2021 தொடரின் முதல் பாகத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 20 ஆவது ஓவரில் ஹர்சல் படேலுக்கு எதிராக 37 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜா மெகா சாதனை படைத்தார், ஆனாலும் கூட ஜடேஜாவை விமர்சிக்காமல் மஞ்சரேக்கரால் இருக்க முடியவில்லை.

குறைகள் இருக்கு:

கடந்த 2 ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா தமக்கு உண்டான 4 அவர்களையும் முழுமையாக வீசவிலலை என்பது முக்கியமான விஷயமாகும் ஏனெனில் அவர் முழுமையாக பௌலிங் செய்தால் அது எம்எஸ் தோனி நிம்மதி பெருமூச்சு விட வழிவகுக்கும். ஒருவேளை தனது முழு 4 ஓவர்களையும் ஜடேஜா வீசினால் அவரின் அணிக்கு அவர் மிகப்பெரிய சொத்தாக அமைவார்

என ரவீந்திர ஜடேஜா பற்றி மேலும் கூறிய மஞ்ச்ரேக்கர் அவரின் கிரிக்கெட்டில் இன்னும் குறைகள் இருப்பதாக சுட்டிக்கட்டினார்.

ஐபிஎல் 2021 தொடரில் ரவீந்திர ஜடேஜா இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 179 ரன்களை 59.66 என்ற அற்புதமான சராசரியில் 146.72  என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார், அத்துடன் 8 விக்கெட்டுகளும் எடுத்து முக்கியமான ஆல்-ரவுண்டராக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction