டி20 உலககோப்பைகளின் தொடர் நாயகர்கள், List Of Man Of The Series in T20 World Cup

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு ஆகிய நாடுகளில் கோலாகலமாக துவங்கி உள்ளது, இந்த தொடரில் 2 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கு பெறுகின்றன.

List Of Man Of The Series in T20 World Cup History
Virat Kohli | Shane Watson | Kevin Peterson (Photo : Getty Images)


கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 6 முறை நடைபெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன.

தொடர் நாயகன்கள்:

ஒரு அணி உலகக் கோப்பையை வெல்வது என்றால் அதற்கு அந்த அணியில் இருந்து ஏதேனும் ஒரு வீரர் மிகவும் அபாரமாக பங்காற்ற வேண்டிய அவசியம் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது, அப்படி அசத்தும் வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சிலமுறை சில வீரர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடி தங்களின் அனைத்தையும் கொடுத்தாலும் கூட கோப்பையை தங்கள் நாட்டுக்காக வென்று கொடுக்க முடியாது. எடுத்துக்காட்டாக 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் மலைபோல ரன்கள் குவித்த போதிலும் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

சரி இந்த 6 உலக கோப்பைகளிலும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பற்றிய முழு விவரம் பார்ப்போம் வாங்க:

1. ஷாஹித் அப்ரிடி - பாகிஸ்தான், ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2007:

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் 20 ஓவர் உலக கோப்பையை எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியுடன் வென்று சரித்திரம் படைத்தது.

அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வந்து தோற்ற போதிலும் அதுவரை அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பாகிஸ்தானின் சாகித் அப்ரிடிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

  • அவர் அந்த உலகக் கோப்பையில் 91 ரன்கள் மட்டும் 11 விக்கெட்டுகள் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

2. திலகரத்னே தில்சன் - இலங்கை, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2009:

முதல் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தும் நூலிழையில் இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தான் இங்கிலாந்தில் நடைபெற்ற 2வது ஐசிசி டி20 உலகக் கோப்பையின் பைனலில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

2007 போலவே இம்முறையும் இறுதிப்போட்டியில் இலங்கை தோற்ற போதிலும் அந்த உலகக் கோப்பை முழுக்க இலங்கை அணியின் வெற்றிகளுக்கு பலமுறை முக்கிய பங்காற்றிய இலங்கையின் அதிரடி தொடக்க வீரர் திலகரத்னே தில்ஷன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

  • அவர் உலக கோப்பையில் அதிகபட்சமாக 319 ரன்கள் குவித்து இந்த விருதை வென்று சாதித்தார்.

3. கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து - ஐசிசி டி20 உலகக் கோப்பை 2010:

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 20 ஓவர் உலக கோப்பையை பால் கலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து வெற்றி பெற்று சாதனை படைத்தது.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து வென்ற முதல் ஐசிசி உலக கோப்பை அதுவாகும், இந்த சரித்திர வெற்றிக்கு அந்த உலகக் கோப்பை முழுவதிலும் வித்திட்ட இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் அந்த உலக கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

  • டி20 உலக கோப்பையில் வெற்றி பெற வெற்றி பெற்ற ஒரு அணியை சேர்ந்த வீரர் தொடர் நாயகன் விருதை வெல்லுவது இந்த உலக கோப்பையில் மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

அவர் 248 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஷேன் வாட்சன் - ஆஸ்திரேலியா, ஐசிசி 20 ஓவர் உலககோப்பை 2012:

வங்க தேசத்தில் நடைபெற்ற 2012 ஐசிசி டி20 உலகக் கோப்பையை டேரன் சம்மி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வென்றது.

இருப்பினும் அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஷேன் வாட்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

  • ஏனெனில் 249 ரன்கள் குவித்ததுடன் 11 விக்கெட்டுகளையும் எடுத்து ஒரு அற்புதமான ஆல்-ரவுண்டராக ஜொலித்ததால் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

5. விராட் கோலி - இந்தியா, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2014:

இலங்கையில் நடைபெற்ற 2014 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்ற இந்தியா அதில் இலங்கையிடம் அவர்களது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது.

அந்த இறுதி போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி மட்டும் இந்தியா எடுத்த 130 ரன்களில்  தனி ஒருவனாக 58 பந்துகளில் 77 ரன்கள் குவித்து போராடிய வேளையில் இதர இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய தவறியதால் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த 77 ரன்கள் உட்பட அந்த உலகக் கோப்பையில் மொத்தம் 319 ரன்கள் அடித்த விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார்.

  • அத்துடன் டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
Virat Kohli in T20 world cup
Photo By Getty Images

6. விராட் கோலி - இந்தியா, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2016:

2014இல் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா 2016 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் அரையிறுதிப் போட்டி வரை வந்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது, பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வென்றது.

இந்த முறையும் இந்தியாவின் பேட்டிங்கில் முதுகெலும்பாக விளங்கி ரன் மழை பொழிந்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

அவர் 273 ரன்கள் குவித்து 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

  • இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Search Tags : Player Of The Tournament in T20 World Cup History, ICC T20 World Cup Man Of The Series, Virat Kohli in 2014 T20 World Cup, Virat Kohli Runs in 2016 T20 World Cup.
Previous Post Next Post

Your Reaction