டி20 உலககோப்பைகளில் சதம் அடித்த பேட்டர்களின் பட்டியல் - Centuries in T20 WorldCup History

ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் 7வது முறையாக கோலாகலமாக நடைபெற உள்ளது, இன்று உலகம் முழுவதிலும் நடைபெறும் ஐபிஎல் உட்பட பல பிரீமியர் லீக் தொடருக்கு முன்னோடியாக டி20 உலக கோப்பை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

List Of Centuries in t20 world cup History
Brendon Mccullam | Chris Gayle | Suresh Raina (Photo : Getty Images)


  • அதில் எம்எஸ் தோனி தலைமையிலான அனுபவம் இல்லாத இளம் இந்திய கிரிக்கெட் அணி அந்த முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்தது இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது.

சதங்கள் பட்டியல்:

சரி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 தொடரை முன்னிட்டு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் சதங்கள் விளாசிய வீரர்களை பற்றி பார்ப்போம் வாங்க:

  • டி20 உலக கோப்பை வரலாற்றில் இதுவரை வெறும் 7 வீரர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளார்கள்.

1. கிறிஸ் கெயில் : கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடங்கியது, அந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

அந்த முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை பந்தாடி 57 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 10 மெகா சிக்சர்களை பறக்கவிட்டு சதம் விளாசி 117 ரன்கள் அடித்தார். 

  • இதன் வாயிலாக டி20 உலக கோப்பையில் சதம் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அதேபோல கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெயில் வெறும் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 100* ரன்கள் குவித்தார்.

  • வெறும் 48 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையையும் படைத்தார்.

2. சுரேஷ் ரெய்னா : கடந்த 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் சுரேஷ் ரெய்னா அந்த அணி பந்து வீச்சாளர்களை சரமாரியாக அடித்து 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட சதம் விளாசி 101 ரன்கள் குவித்து அசத்தினார்.

  • இதன் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீரராக சுரேஷ் ரெய்னா இன்றும் ஜொலிக்கிறார்.

3. மகிளா ஜெயவர்த்தனே: இலங்கையின் ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே கடந்த 2010இல் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 64 பந்துகளில் 100 ரன்கள் அடித்து டி20 உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இலங்கை வீரராக சதத்தை பதிவு செய்தார்.

4. ப்ரெண்டன் மெக்கல்லம்: நியூசிலாந்தின் பட்டையை கிளப்பும் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 123 ரன்கள் விளாசினார்.

  • வங்க தேசத்தை புரட்டி எடுத்து 123 ரன்கள் விளாசிய அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

5. அலெக்ஸ் ஹெல்ஸ் : கடந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 116* ரன்கள் விளாசி இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அபார சதம் அடித்தார்.

6. அஹமத் சேஷாத் : பாகிஸ்தானின் அதிரடி வீரர் அஹமத் சேஷாத் கடந்த 2014 டி20 உலக கோப்பையின் ஒரு லீக் போட்டியில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணிலேயே பந்தாடினார், அன்றைய நாளில் 62 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதம் அடித்து 111* ரன்கள் எடுத்தார்.

7. தமீம் இக்பால்: கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் சிறிய நாடான ஓமன் அணியை புரட்டி எடுத்த வங்கதேசத்தின் அதிரடி வீரர் தமிம் இக்பால் 63 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 103* ரன்கள் எடுத்தார்.

Search Tags : List Of Centuries in ICC T20 World Cup History. 

Previous Post Next Post

Your Reaction