ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் பங்கேற்ற 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 8 தோல்விகள் உடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.
Photo : BCCI/IPL |
கலக்கல் ராகுல்:
இத்தனைக்கும் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்ற 13 போட்டிகளில் 626 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார், லீக் சுற்று விட்டு பஞ்சாப் வெளியேறிய போதிலும் அந்த 626 ரன்களை மற்ற அணி வீரர்களால் இன்னும் தொட முடியவில்லை..
ஓப்பனிங்கில் கேஎல் ராகுல் சக வீரர் மயங் அகர்வாலுடன் இணைந்து பல முறை மலைபோல ரன்கள் குவித்த போதிலும் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் காரணமாக பஞ்சாப் பல தோல்விகளை சந்தித்து லீக் சுற்று விட்டு வெளியேறியது.
குறிப்பாக கேஎல் ராகுல் தலைமையில் மோசமான மிடில் ஆடர் பேட்டிங் காரணமாக கடந்த சில வருடங்களாகவே வெற்றி பெறவேண்டிய போட்டிகளில் கடைசி ஓவரில் வெற்றியை எதிரணிக்கு தாரைவார்த்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.
எடுத்துக்காட்டாக இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்கு நடந்த 2வது லீக் போட்டியில் எதிராக ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடிய போதிலும் கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றுப் போனது. அந்த வெற்றியை பெற்றிருந்தால் அந்த அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
வெளியேறும் கேஎல் ராகுல்:
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருடன் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் வெளியேற உள்ளதாக பிரபல "கிரிக்பஸ்" இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கேஎல் ராகுல் 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
- இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப் சுறறுக்கு ஒரு முறை கூட தகுதி பெற முடியவில்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டு 11 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட கேஎல் ராகுல் அதன்பிறகு பேட்டிங்கில் பல அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறார், இதனால் அவரின் மதிப்பும் 2018 விட தற்போது கூடியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
கூடிய மவுசு:
வரும் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அவரின் மதிப்பு எகிறி உள்ளதால் இதர அணிகள் அவரை தங்கள் அணிக்காக விளையாட ஏலத்தில் வாங்குவதற்கு மிகுந்த ஆர்வத்தை காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- கடந்த 2018 ஆம் ஆண்டு 659 ரன்களும் 2019ஆம் ஆண்டு 593 ரன்களும் 2020 ஆம் ஆண்டு 670 ரன்களும் 2021 ஆம் ஆண்டு 626 ரன்கள் கேஎல் ராகுல் தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார்.
எனவே அடுத்த ஏலத்தில் பஞ்சாப் அவரைத் தக்க வைக்காவிட்டால் ராகுலை வாங்க 2022 மெகா மெகா எழுத்தில் கண்டிப்பாக அனைத்து அணிகளும் கடும் போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும் அடுத்த மெகா ஏலத்தில் அவரை தக்க வைக்கும் எண்ணம் பஞ்சாப் அணி நிர்வாகத்தில் இல்லை என்பதாலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளதால் அடுத்த வருடம் கேஎல் ராகுல் புதிய ஒரு அணியில் விளையாடுவதைப் பார்க்க முடியும் என நம்பலாம்.