IND vs NZ T20WC: பாகிஸ்தான் அடுத்தடுத்த வெற்றிகள், சிக்கலில் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு

ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி டி20 உலககோப்பை 2021 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Ind Vs Pak In World Cup 2021
Photo Credits : Getty Images


மிரட்டும் பாகிஸ்தான்: 

இந்த சூப்பர் 12 சுற்றில் இந்தியா இடம் வகிக்கும் குரூப் 2வது பிரிவு மிகவும் பரபரப்பான காணப்படுகிறது, இந்த பிரிவில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தனது முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • இதன் வாயிலாக டி20 உலக கோப்பை மற்றும் ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றில் 12 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் சாய்த்து சரித்திர வெற்றியை பதிவு செய்தது.

அதை தொடர்ந்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது சூப்பர் 12 போட்டியிலும் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து தோல்வி:

முன்னதாக நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் தனது அபார பந்துவீச்சால் நியூசிலாந்து 20 ஓவர்களில் வெறும் 134/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

பின்னர் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து எளிதான வெற்றி பெற்றது, 

பாகிஸ்தான் டாப்:

இந்த 2 அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாக சூப்பர் 12 குரூப்-2 பிரிவின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 130 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் உள்ளது.

  • முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா புள்ளிகள் ஏதுமின்றி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது.

புளியை கரைக்கும் பாகிஸ்தான்:

இந்நிலையில் பாகிஸ்தானின் அடுத்தடுத்த 2 வெற்றிகளால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு லேசான சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

ஆம் இந்த உலக கோப்பையில் இந்தியாவிற்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ளது, அதில் வரும் அக்டோபர் 31 ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தனது 2-வது சூப்பர் 12 போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியாவால் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

Team India In T20 World Cup
Team India (Photo : BCCI)

 

வாய்ப்புகள் - காரணங்கள்:

ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய 3 சிறிய அணிகளுக்கு எதிராக நியூசிலாந்து வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது உங்களுக்கே தெரியும்.

  • அந்த நிலைமை ஏற்பட்டால் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி விடும்.
  • அதேபோல் நியூஸிலாந்திடம் இந்தியா தோற்கும் பட்சத்தில் அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான்,ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய 3 சிறிய அணிகளுக்கு எதிராக 3 வெற்றிகளை பெற்றாலும் கூட புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும், இதன் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

ஏனென்றால் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றுவட்டது, எனவே அந்த அணிக்கு மீதமிருக்கும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெல்வது மிகவும் சுலபம் என்பதில் சந்தேகமில்லை.

  • ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றால் கூட எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் அதற்கு ஆப்கானிஸ்தானின் கையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும், அப்போதும் கூட அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு வெறும் 10 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

வலுவான நியூஸிலாந்து:

இந்த இக்கட்டான சூழ்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை இந்தியா வீழ்த்துவது மிகவும் கடினம் என்றே கூறலாம்.

  • ஏனெனில் கடந்த 2003 50 ஓவர் உலககோப்பைக்கு பின்னர் டி20 மற்றும் 50 ஓவர் என எந்த ஒரு உலகக் கோப்பைகளிலும் நியூசிலாந்தை இந்தியாவால் தோற்கடிக்க முடியவில்லை, குறிப்பாக டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை இந்தியா ஒரு முறை கூட வென்றதே கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்து வெறும் கையுடன் நடையை கட்டியது.

ஏற்கனவே பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோற்றுள்ளதால் கடும் விரக்தியில் ஆழ்நதுள்ள இந்திய ரசிகர்களுக்கு இது மேலும் கலவையை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post Next Post

Your Reaction