IND vs NZ T20 World Cup 2021 : வாழ்வா சாவா போட்டியில் வெல்லப்போவது இந்தியாவா - நியூஸிலாந்தா, முழு விவரம்

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரில் சூப்பர் 12 சுற்றின் 2வது குரூப்பில் நடைபெறும் முக்கியமான 28வது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Photo Credits : Getty Images


போட்டி விவரம்:

இந்தியா V நியூஸிலாந்து, போட்டி 28, குரூப் - 2, சூப்பர் 12 சுற்று.

இரவு 7.30 மணி, துபாய்.

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.

வாழ்வா - சாவா போட்டி:

இந்த போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டி என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் இந்த 2 அணிகளுமே இந்த உலக கோப்பையில் களமிறங்கிய முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியுற்றன, முதலில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் பின்னர் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • இதன் காரணமாக தற்போதைய நிலைமையில் குரூப் 2 புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் 3 போட்டிகளில் பங்கேற்று 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது, ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது.

அரை இறுதியில் பாக்:

தற்போதைய நிலைமையில் இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான் தனக்கு எஞ்சியிருக்கும் ஸ்காட்லாந்து, நமிபியா போன்ற கத்து குட்டி அணிகளை கண்டிப்பாக தோற்கடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 5 போட்டிகளில் 5 வெற்றியுடன் குரூப் 2 புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முதல் அணியாக பாகிஸ்தான் தகுதி பெறும் வாய்ப்பு 99% சதவீதம் உறுதியாகியுள்ளது.

எனவே குரூப் 2 பிரிவில் 2வது அணியாக அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் இந்த போட்டி உட்பட எஞ்சி இருக்கும் 4 போட்டிகளிலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும், தோல்வி அடையும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 50% க்கும் கீழாக குறைந்துவிடும்.

முன்னோட்டம்:

இந்தியா: விராட் கோலி தலைமையிலான இந்தியாவை பொருத்தவரை முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 1 விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்தது.

எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சாளர்கள் கை கொடுத்தால் மட்டுமே வெற்றியைப் பற்றி இந்தியாவால் நினைத்து பார்க்க முடியும், கடந்த போட்டியில் பந்து வீச ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அவர் பந்து வீச முடியாது என்றால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு சர்துல் தாகூருக்கு வாய்ப்பளித்தாக வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவம் வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையை கட்டாயமாக காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது.

பேட்டிங்கில் ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே விராட் கோலி போன்ற அடுத்து வரும் வீரர்களால் ரன்கள் அடிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

  • ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான பினிஷிங் மற்றும் கணிசமான விக்கெட்டுகளை எடுத்தாலே இந்தியாவின் வெற்றி வசமாகும்.

புள்ளிவிவரம்:

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இதுவரை 16 போட்டிகளில் பங்கேற்று உள்ளது.

அதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சராசரி விகிதத்தில் வெற்றிகளைப் பெற்ற அணியாக விளங்குகிறது - 56.25 %.

  • இந்த 16 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது, 2 போட்டிகள் டையில் முடிந்தன.
  • டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்த 2 அணிகள் 2007, 2016 ஆகிய வருடங்களில் மோதிய 2 போட்டிகளில் நியூசிலாந்து மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, இந்தியா இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதே கிடையாது.

இது மட்டுமில்லாமல் கடந்த 2003 50 ஓவர் உலககோப்பைக்கு பின் 20 ஓவர், 50 ஓவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 வகையான ஐசிசி உலக கோப்பைகளிலும் ஒருமுறைகூட நியூசிலாந்தை இந்தியாவால் தோற்கடிக்க முடியவில்லை.

Photo : Getty Images


  • குறிப்பாக 2019 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் 2021 ஜூலை மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது.

பிட்ச் விவரம்:

இந்த போட்டி நடைபெறும் துபாய் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்குமே சிறப்பாக கைகொடுத்து வருகிறது.

இருப்பினும் இந்த மைதானத்தில் இரவு நேர போட்டிகளின் போது மாலை நேரத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் பிட்ச் வேகமாக இருப்பதால் அதை சரியாக கணிக்க முடியாமல் ரன்கள் குவிக்க திண்டாடுகின்றன.

  • ஆனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது இரவு நேரம் வந்து விடுவதால் அப்பொழுது பனி மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் போன்ற அம்சங்கள் பந்தை சரியாக பிடித்து சரியான இடத்தில் வீச பவுலர்களுக்கு மிகுந்த சவாலை அளிக்கிறது, இது இரவு நேரத்தில் சேசிங் செய்யும் அணிகளுக்கு மிகப்பெரிய சாதகமாகி வெற்றிக்கு வித்திடுகிறது.

இதனால் இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி அதிகப்படியான போட்டிகளை வென்றுள்ளது.

எப்படி என்றால் இந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெறும் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன, 10 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன.

எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

உத்தேச இந்திய அணி :

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அல்லது புவனேஸ்வர் குமார் ஆகிய யாரேனும் ஒருவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் ஒரு மோசமான போட்டி காரணமாக இந்திய அணியை குறைத்து மதிப்பிட கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அதே 11 வீரர்கள் களம் இறங்குவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர்/புவனேஸ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா,முகமத் ஷமி.

Previous Post Next Post

Your Reaction