IPL 2022 : கேஎல் ராகுல், வார்னர், ரெய்னா என முன்னணி வீரர்களை குறி வைக்கும் லக்னோ, அஹமதாபாத்

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் ஆமதாபாத் ஆகிய புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன, இதன் காரணமாக அடுத்த சீசன் முதல் 10 அணிகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Photo : bcci/ipl


கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2022 சீசனில் புதியதாக விளையாடும் 2 அணிகளுக்கு நடைபெற்ற ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் முறையே 7090 மற்றும் 5625 கோடி ரூபாய்களுக்கு ஏலத்தில் விலை போனது.

புதிய விதிமுறைகள் :

இந்த 2 அணிகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 2022 சீசனுக்காக நடைபெறும் இருக்கும் மெகா ஏலத்திற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • அதன்படி ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அதில் 3 பேர் இந்தியராக இருக்கலாம் ஒருவர் வெளி நாட்டவராக இருக்கலாம் அல்லது 2 பேர் இந்தியர் 2 பேர் வெளிநாட்டவராக இருக்கலாம்.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் விரும்பும் 3 வீரர்களை முதலில் தேர்வு செய்ய புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளுக்கு முதல் உரிமை அளிக்கப்பட உள்ளது.

  • அதில் இருவர் இந்தியராக இருக்க வேண்டும், ஒருவர் வெளி நாட்டவராக இருக்க வேண்டும்.

நட்சத்திரங்கள் மீது குறி:

இந்த புதிய விதிமுறையின் அடிப்படையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் சில முக்கியமான நட்சத்திர வீரர்களை தேர்வு செய்ய குறி வைத்துள்ளன.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் முக்கியமான 4 வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சியிருக்கும் வீரர்களை ஏலத்தில் விடுவிக்க உள்ளன.

எடுத்துக்காட்டாக மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிசான் மற்றும் கிரன் பொல்லார்ட் ஆகிய 4 வீரர்களை மட்டும் தக்க வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல் பஞ்சாப் அணி கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர்கள் ராகுல் அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஐதராபாத் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட டேவிட் வார்னர் அடுத்த வருடம் வேறு அணிக்காக விளையாட உள்ளதாக ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

நட்சத்திர மவுசு :

சென்னை இல்லாமல் தோனி இல்லை ரோகித் சர்மா இல்லாமல் மும்பை இல்லை என்பது போல் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளுக்கும் நட்சத்திரம் மவுசு என்பது மிகவும் முக்கியமாகும்.

ஏனெனில் நட்சத்திரங்கள் இருந்தால்தான் நிறைய ரசிகர்கள் அந்த அணியை பின்தொடர்ந்து அந்த அணி விளையாடும் போட்டிகளை விரும்பி பார்ப்பார்கள் அப்படி பார்த்தால் தான் அந்த அணிக்கும் பெருத்த லாபம் கிடைக்கும், இதன் காரணத்தினாலேயே புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகள் நட்சத்திர வீரர்களை தங்கள் அணிக்கு தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக 3 வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விதியின் அடிப்படையில் இந்த 2 அணிகளும் தேர்வு செய்ய இருக்கும் முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்:

லக்னோ :

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அதிரடி தொடக்க வீரராக இருப்பது மட்டுமல்லாமல் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்யும் திறமையையும் கொண்டுள்ளார்.

Photo : BCCI/IPL


ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்று சாதனை படைத்துள்ள அவர் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார், எனவே இவரை லக்னோ அணி நிர்வாகம் எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியகுமார் யாதவ் :

மும்பை அணியில் இருந்து சூரியகுமர் யாடத் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

அப்படி மும்பை அவர் விடுக்கும் இருக்கும் பட்சத்தில் அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனெனில் அவரின் தந்தை லக்னோ நகரம் இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

சுரேஷ் ரெய்னா : சென்னைக்காக விளையாடி வரும் நட்சத்திர அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த சில வருடங்களாகவே பாரம் இல்லாமல் தவித்து வருகிறார், குறிப்பாக ஐபிஎல் 2021 தொடரில் அவருக்கு பிளே சுற்றில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை, மேலும் ஏற்கனவே அணியில் இருக்கும் வயதான வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தேர்வு செய்ய சென்னை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால் சுரேஷ் ரெய்னாவை தக்கவைப்பது சந்தேகம் என்றே கூறலாம்.

அப்படி சுரேஷ் ரெய்னா விடுவிக்கப்பட்டால் அவரை லக்னோ அணி நிர்வாகம் அப்படியே தூக்கி விடும், ஏனென்றால் சுரேஷ் ரெய்னா உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

புவனேஸ்வர் குமார் : சுரேஷ் ரெய்னா போலவே உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இந்திய பவுலர் புவனேஸ்வர் குமார் சமீபகாலமாக நல்ல பார்மில் இல்லை என்பதால் ஹைதராபாத் அவரை விடுவிக்கலாம், எனவே அவரையும் லக்னோ நிர்வாகம் ஏலத்தில் எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அஹமதாபாத்:

கேஎல் ராகுல் : கேஎல் ராகுல் மலைபோல ரன்கள் குவித்த போதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக பிளே ஆப் சுற்றுக்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை, இதனால் அடுத்த சீசனில் அவர் பஞ்சாப் அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்படும் பட்சத்தில் அகமதாபாத் நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Photo : BCCI/IPL


ஹர்டிக் பாண்டியா : ஐபிஎல் 2022 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்படுவார் என செய்திகள் கசிகின்றன. ஒரு நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் அவர் ஆமதாபாத் நகர் இருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார், எனவே அவரை அகமதாபாத் அணி நிர்வாகம் முதல் ஆளாக எடுக்க போட்டி போடும் என எதிர்பார்க்கலாம்.

ஷ்ரேயஸ் ஐயர் : காயம் காரணமாக விலகிய ஸ்ரேயஸ் அய்யரை அது தான் சமயம் என டெல்லி கேப்பிடல் அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து இந்த வருடம் தூக்கிவிட்டு ரிசப் பண்ட்க்கு வாய்ப்பளித்தது ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு கேப்டனாக அணியில் செயல்பட விரும்புவதாக தெரிகிறது.

அவர் ஐபிஎல் 2020 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை டெல்லி அணியை கேப்டனாக அழைத்து வந்த திறமை கொண்டவர், எனவே வருங் காலத்தை கருத்தில்கொண்டு ஸ்ரேயாஸ் அய்யரை ஐதராபாத் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்து கேப்டனாக கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவர்கள் மட்டுமல்லாது மேலும் சில நட்சத்திர வீரர்கள் மீது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் குறி வைத்துள்ளன.

Previous Post Next Post

Your Reaction